கல்வி அமைச்சகம், இந்திய அரசு · செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
காசி தமிழ்ச் சங்கமம் 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · கல்வி அமைச்சகம், இந்திய அரசு
பின்செல்
காசி தமிழ்ச் சங்கமம் 5.0 · சுற்றறிக்கை

பொறுப்பு நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள்

காசி தமிழ்ச் சங்கமம் 5.0-இன் மாணவர் ஈடுபாட்டுத் திட்டம் குறித்து, இந்திய அரசு, கல்வி அமைச்சகத்தின் 31-10-2026 நாளிட்ட அரைஅலுவல் கடிதத்தின் (D.O. No. 16-2/2026-Skt.I (Pt.)) முக்கியக் குறிப்புகள்.

பங்கேற்கும் கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கான மதிப்பீட்டுக் குழு

நிலையான செயல்பாட்டு நடைமுறை, கடிதத்தின் இணைப்பு-V

பரிசீலனைக்குப் பின் (அடையாளம், அமைவிடம், அங்கீகாரம்/இணைவு, பொருந்தும் இடங்களில் AISHE/நிறுவனக் குறியீடு, அதிகாரப்பூர்வத் தொடர்பு விவரங்கள், நிறுவனத்தின் தகுதிவாய்ந்த அதிகார அமைப்பின் ஒப்புதல்) தகுதியுள்ளவையாகக் காணப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே மதிப்பீட்டுக் குழுவின் முன் வைக்கப்படும்; சரிசெய்யக்கூடிய குறைபாடுகளை அறிவிக்கப்பட்ட பரிசீலனைக் காலத்திற்குள் சரிசெய்யலாம்.

  1. குழுவை அமைத்தல்: ஒவ்வொரு பொறுப்பு நிறுவனத்தின் தலைவரும் ஒரு மதிப்பீட்டுக் குழுவை அமைக்க வேண்டும்.
  2. குழுவின் உறுப்பினர்கள்: மாநில / யூனியன் பிரதேசப் பொறுப்பு அலுவலர் உட்படக் குறைந்தது மூன்று உறுப்பினர்களைக் குழு கொண்டிருக்க வேண்டும்.
  3. மதிப்பீட்டு நடைமுறை: தகுதியுள்ள விண்ணப்பங்கள் அனைத்தையும் குழு மதிப்பீடு செய்து, நிலையான செயல்பாட்டு நடைமுறையின் பத்தி 3-இல் உள்ள அளவுகோல்கள், மதிப்பெண் அளவுருக்கள் ஆகியவற்றின்படி மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
  4. சான்றொப்பம்: குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் மதிப்பீட்டுத் தாள்களில் கையொப்பமிட வேண்டும்.
  5. ஒப்புதல்: தேர்வுப் பட்டியலையும் காத்திருப்புப் பட்டியலையும் பொறுப்பு நிறுவனத்தின் தகுதிவாய்ந்த அதிகார அமைப்பின் ஒப்புதலுக்குக் குழு பரிந்துரைக்க வேண்டும்.

தேர்வு அளவுகோல்கள் (பத்தி 3)

#தேர்வு அளவுகோல்கள் (பத்தி 3)அதிகபட்ச மதிப்பெண்கள்
1நிறுவன ஆயத்தநிலை20
2மாணவர்களைச் சென்றடைவதற்கான முன்மொழிவு20
3திருக்குறளுடனான கல்விசார் ஈடுபாடு20
4புவியியல் பிரதிநிதித்துவம்20
5நிறுவன, பாடத்துறைப் பன்முகத்தன்மை20

மொத்தம்: 100 மதிப்பெண்கள். பரிந்துரைக்கப்படும் தகுதி வரம்பு: 60 மதிப்பெண்கள்.

தகுதியுள்ள கல்வி நிறுவனங்களை மொத்த மதிப்பெண்களின் இறங்கு வரிசையில் தரவரிசைப்படுத்தி, இணைப்பு-I-இல் அந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்திற்கு வகுக்கப்பட்ட எண்ணிக்கையிலான நிறுவனங்களை மட்டும், அந்த எண்ணிக்கையில் வழக்கமாக 20 விழுக்காடு வரையிலான காத்திருப்புப் பட்டியலுடன், தேர்வு செய்க.

பதிவு ஆவணங்கள், மதிப்பீட்டுத் தாள்கள், ஒப்புதல் பெற்ற தேர்வுப் பட்டியல், காத்திருப்புப் பட்டியல், தகுதிவாய்ந்த அதிகார அமைப்பின் ஒப்புதலுக்கான சான்று ஆகியவற்றைப் பாதுகாத்து வைத்திருக்க.

மாற்றீடு

தேர்வு செய்யப்பட்ட கல்வி நிறுவனம் ஒன்று மறுத்தாலோ, பதிலளிக்காமல் இருந்தாலோ, அறிவிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் மாணவர் ஒருவரைப் பரிந்துரைக்கத் தவறினாலோ, ஒப்புதல் பெற்ற காத்திருப்புப் பட்டியலில் அடுத்துள்ள தகுதியுள்ள கல்வி நிறுவனத்தைச் சேர்க்கலாம். ஒவ்வொரு மாற்றீடும் காரணங்களுடன் பதிவு செய்யப்பட்டு, CICT-க்குத் தெரிவிக்கப்படும் முன், மாநில / யூனியன் பிரதேசப் பொறுப்பு அலுவலரால் அல்லது தகுதிவாய்ந்த அதிகார அமைப்பால் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

நிலையான செயல்பாட்டு நடைமுறையின் நோக்கங்களையும் பரந்த கொள்கைகளையும் கருத்தில் கொண்டு, பொறுப்பு நிறுவனம் ஒன்று தேர்வுக்குத் தனக்கென வெளிப்படையான, புறநிலையான வழிமுறையைப் பின்பற்றலாம்; பின்பற்றப்படும் வழிமுறை ஆவணப்படுத்தப்பட்டு CICT-க்குத் தெரிவிக்கப்படுகிறது.

KTS 5.0 – முக்கிய நாள்கள்

பதிவும் தேர்வும்

இணையவழி நிகழ்ச்சிகள்

  • 28-11-2026KTS 5.0 தொடக்க விழா
  • 12-12-2026KTS 5.0 நிறைவு விழா
  • எல்லாப் பொறுப்பு நிறுவனங்களும் பங்கேற்கும் கல்வி நிறுவனங்களும் பரிந்துரைக்கப்பட்ட மாணவர்களும் இணையவழியில் இணைவர். இணைவதற்கான இணைப்புகள் தனியே பகிரப்படும்.
  • பங்கேற்பாளர்கள் அனைவரும் CICT-இடமிருந்து பங்கேற்புச் சான்றிதழ் பெறுவர்.

ஆய்வும் சமர்ப்பிப்பும்

  • 14-12-2026-க்குள்CICT வழங்கும் கல்விசார் அறிமுகப் பயிற்சியும் கற்றல் பொருளும்
  • 15-12-2026 – 14-01-2027ஒரு மாத ஆய்வு மற்றும் எழுத்துப் பணிக் காலம்
  • 14-01-2027-க்குள்ஆய்வுப் பணியையும் அறிக்கைகளையும் சமர்ப்பிக்கக் கடைசி நாள்

இணையதளத்தில்

திட்டம் தொடர்பான எந்த விளக்கத்திற்கும் ஒருங்கிணைப்பிற்கும்: Dr. R. Bhuvaneshwari, பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை · registrar@cict.in · 9790325518 / 9965734497

ஐயங்கள் உள்ளனவா? kts@cict.in என்ற முகவரிக்கு எழுதுக அல்லது 044-22540125 என்ற எண்ணில் அழைக்கவும்.

முன்முயற்சி Government of India கல்வி அமைச்சகம், இந்திய அரசு
செயல்படுத்துவது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT), சென்னை
இணைந்து செயல்படுவோர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னைkashitamil.iitm.ac.in  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், வாரணாசிkashitamil.bhu.edu.in  பாரதிய பாஷா சமிதி