ᱥᱮᱪᱮᱫ ᱢᱚᱱᱛᱨᱟᱞᱚᱭ, ᱵᱷᱟᱨᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨ · ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱥᱴᱤᱴᱭᱩᱴ ᱚᱯᱷ ᱠᱞᱟᱥᱤᱠᱟᱞ ᱛᱟᱢᱤᱞ (CICT), ᱪᱮᱱᱱᱟᱭ
ᱠᱟᱥᱤ ᱛᱟᱢᱤᱞ ᱥᱚᱝᱜᱚᱢᱚᱢ 5.0
ᱠᱟᱥᱤ ᱛᱟᱢᱤᱞ ᱥᱚᱝᱜᱚᱢᱚᱢ 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱥᱴᱤᱴᱭᱩᱴ ᱚᱯᱷ ᱠᱞᱟᱥᱤᱠᱟᱞ ᱛᱟᱢᱤᱞ (CICT), ᱪᱮᱱᱱᱟᱭ · ᱥᱮᱪᱮᱫ ᱢᱚᱱᱛᱨᱟᱞᱚᱭ, ᱵᱷᱟᱨᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨ
ᱱᱤᱛᱚᱜ ᱟᱹᱨᱡᱤ ᱢᱮ
ᱤᱱᱴᱚᱨᱯᱷᱮᱥ ᱨᱮᱭᱟᱜ ᱱᱚᱶᱟ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱫᱚ ᱢᱤᱫ ᱰᱨᱟᱯᱷᱴ ᱠᱟᱱᱟ ᱟᱨ CICT ᱦᱚᱛᱮᱛᱮ ᱧᱮᱞ ᱵᱤᱰᱟᱹᱣᱚᱜ ᱠᱟᱱᱟ ᱾ English
ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱚ

22 ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮ ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ

ᱡᱚᱛᱚ 1,330 ᱠᱩᱨᱚᱞ, 8 ᱟᱱᱟᱜ ᱚᱱᱩᱥᱩᱪᱤ ᱨᱮᱭᱟᱜ ᱯᱟᱹᱨᱥᱤ ᱠᱚᱛᱮ CICT ᱨᱮᱭᱟᱜ ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱥᱟᱶ ᱾ ᱢᱤᱫ ᱚᱫᱷᱭᱟᱭ ᱟᱨ ᱢᱤᱫ ᱯᱟᱹᱨᱥᱤ ᱵᱟᱪᱷᱟᱣ ᱢᱮ ᱾

← ᱢᱟᱲᱟᱝᱟᱜᱤᱱᱟᱹ ᱛᱟᱭᱚᱢ →
காமத்துப்பால் · Love › களவியல் · The Pre-marital love

110. குறிப்பறிதல் · Recognition of the Signs

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
இவளுடைய மையுண்ட கண்களின் நோக்கு என்மேல் இரண்டு நோக்காயிற்று. அவற்றுள் ஒன்று எனக்கு நோய் செய்யும் நோக்கு; இன்னொன்று அந்நோய்க்கு மருந்தாகும் நோக்கு.
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
இவள் கண்கள் நான் காணாதபொழுது என்னைக் காணுகின்ற காலத்தால் சிறிய நோக்கம், மெய்யுறு புணர்ச்சியில் பாதி அளவினது அன்று; அதனினும் பெரிதாகும்.
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
நான் பார்க்காதபோது அவள் என்னை அன்போடு பார்த்தாள்; அவ்வாறு பார்த்து ஒன்றை எண்ணி நாணத்தோடு வேண்டினாள்; அக்குறிப்பானது இருவரிடையும் தோன்றி அன்புப்பயிர் வளர அதில் அவள் ஊற்றிய நீரானது.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
நான் அவளை நோக்கும்போது அவள் என்னை எதிர்நோக்காமல் நிலத்தை நோக்குவாள்; நான் அவளை நோக்காதபோது அவள் என்னை நோக்கித் தன்னுள்ளே மகிழ்ந்து புன்முறுவல் செய்வாள்.
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
என்னை நேரே குறிக்கொண்டு நோக்காததோடு, ஒரு கண்ணைச் சுருங்கினாற்போல என்னைப்பார்த்துப் பின் தன்னுள்ளே மகிழ்ந்து புன்முறுவல் செய்வாள்.
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
புறத்தே நண்பரும் பகைவரும் அல்லாதார்போலப் பேசினாலும், அகத்தே அன்புடையார் சொல் பிற்பயத்தல் விரைவில் அறியப்படும்.
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
பின் இனிதாய் முன் இன்னாததாய்ச் சொல்லப்படும் சிறு சொல்லும் அகத்தே அன்பிருந்தும் புறத்தே அன்பற்றாற்போன்ற வெகுளி நோக்கும் பகைவரும் நண்பரும் அல்லாதார்போன்று உண்மையில் நண்பரானவர்க்கு ஒருபயன் குறித்து வருவன.
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
நான் அவளை இரந்து நோக்கும்போது அதன் குறிப்பறிந்து நெகிழ்ந்து உள்ளே மகிழ்ந்து புன்முறுவல் செய்வாள்; அதனால், அசையும் இயல்பினை உடையவளுக்கு அந்நகையில் தோன்றும் ஓர் அழகு உண்டு.
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
முன் அறியாதவர்போல ஒருவரையொருவர் பொது நோக்கத்தால் நோக்குதல் காதலை உடையவரிடமே உண்டு.
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
காதல்கொண்ட இருவருள் ஒருவர் கண்களோடு மற்றவர் கண்கள் நோக்கால் ஒத்திருக்குமாயின், அவர் சொல்லுகின்ற சொற்கள் ஒரு பயனும் இல்லாதவை.

ᱚᱫᱷᱭᱟᱭ ᱠᱚ

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

ᱛᱚᱨᱡᱚᱢᱟ ᱠᱚ © ᱥᱮᱱᱴᱨᱟᱞ ᱤᱱᱥᱴᱤᱴᱭᱩᱴ ᱚᱯᱷ ᱠᱞᱟᱥᱤᱠᱟᱞ ᱛᱟᱢᱤᱞ, ᱪᱮᱱᱱᱟᱭ · CC BY 4.0 · ᱛᱤᱨᱩᱠᱠᱩᱨᱚᱞ ᱢᱟᱞᱴᱤᱞᱤᱝᱜᱩᱣᱟᱞ ᱮᱯ ᱞᱮᱠᱟᱛᱮ ᱦᱚᱸ ᱧᱟᱢᱚᱜᱼᱟ

ᱮᱦᱚᱵᱤᱡ Government of India Ministry of Education
ᱠᱟᱹᱢᱤ ᱪᱟᱞᱟᱣᱤᱡ Central Institute of Classical Tamil
ᱥᱟᱶᱛᱮ ᱨᱮ Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti