وزارتِ تعلیم، حکومتِ ہند · سنٹرل انسٹی ٹیوٹ آف کلاسیکل تمل (CICT)، چنئی
کاشی تمل سنگمم 5.0
کاشی تمل سنگمم 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
سنٹرل انسٹی ٹیوٹ آف کلاسیکل تمل (CICT)، چنئی · وزارتِ تعلیم، حکومتِ ہند
انٹرفیس کا یہ ترجمہ ابھی مسودہ ہے اور CICT اس کا جائزہ لے رہا ہے۔ English
واپس
تراجم

22 زبانوں میں تِروکُّرل

تمام 1,330 اشعار، آٹھویں شیڈول کی زبانوں میں CICT کے تراجم کے ساتھ۔ باب اور زبان منتخب کریں۔

تِروکُّرل مطالعاتی ساتھی سے پوچھیں ←

→ پچھلااگلا ←
காமத்துப்பால் · Love › களவியல் · The Pre-marital love

116. பிரிவு ஆற்றாமை · Separation unendurable

تمل متن کمپیوٹر کی آواز میں پڑھا جاتا ہے۔
1151
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்வல்வரவு வாழ்வார்க் குரை.
நீ என்னிடமிருந்து பிரியப்போவது இல்லையானால், அதனை எனக்குச் சொல்; அதல்லாமல், நீ பிரிந்துபோய் விரைந்துவருதல் பற்றிச் சொல்வதானால் அதனை அப்பொழுது உயிர்வாழ்ந்துகொண்டு இருப்பவர்களுக்குச் சொல்.
1152
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்புன்கண் உடைத்தால் புணர்வு.
காதலரின் நோக்கு மட்டுமே புணர்ச்சி குறிப்பதாயின் எனக்கு அது இன்பம் உடையதாயிருக்கும்; இன்று அப்புணர்ச்சி நிகழ்ந்தாலும் அது அவர் என்னிடமிருந்து பிரியப்போகிறார் என்று அஞ்சும் அச்சத்தை உடையதாயிருந்தது.
1153
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்பிரிவோ ரிடத்துண்மை யான்.
எனது பிரிவாற்றாமை பற்றி அறிந்த காதலரிடமும் ஒரோவழிப் பிரிவு நிகழ்தலால், அவர் ‘பிரியேன்’ என்று சொன்ன சொல்லையும் என்னால் நம்பமுடியவில்லை.
1154
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்தேறியார்க்கு உண்டோ தவறு.
எதிர்ப்பட்டபோதே முகம் மலர்ந்து இன்சொல் கூறி ‘உன்னிடமிருந்து பிரியமாட்டேன், அஞ்சாதே’ என்று சொன்னவர் பின்னால் தாமே பிரிவாரானால், அவர் சொன்ன தெளிவான சொல்லை மெய்யென்று எண்ணியவர்க்குக் குற்றம் உண்டோ? சொல்லும் செயலும் ஒன்றுக்கொன்று ஒவ்வாமையாகிய குற்றம் செய்தவர் அவரே.
1155
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்நீங்கின் அரிதால் புணர்வு.
என் உயிர் நீங்காமல் என்னைக் காப்பாற்ற நினைத்தாயானால் அதனை ஆளுதற்கமைந்த காதலர் செல்லுதலை நிறுத்துவாயாக; அவ்வாறு நிறுத்தப்படாமல் அவர் செல்லுவாரானால் அவரால் ஆளப்பட்ட உயிரும் என் உடலைவிட்டு நீங்கும்; அவரோடு கூடுதலும் எனக்கு அரிதாகும்.
1156
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்நல்குவர் என்னும் நசை.
தலைவர் தாமே என்முன் நின்று அவரது பிரிவை உணர்த்தும் கொடுமனம் கொண்டவரானால், அத்தன்மை உடையவர் என் ஆற்றாமை அறிந்து வந்து அன்புகாட்டுவார் என்று நான் கொள்ளும் ஆசை பொருளற்றதாகும்.
1157
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கைஇறைஇறவா நின்ற வளை.
துறைவன் என்னைப் பிரிந்துசென்றதைத் தாமே உணர்ந்து என் முன்கை இறையினின்றும் கழலுகின்ற வளையல்கள் எனக்கு உணர்த்தாவோ? அவர் சொல்லிக்கேட்டு நீ என்னிடம் வந்துசொல்ல வேண்டுமோ?
1158
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்இன்னாது இனியார்ப் பிரிவு.
பெண்களுக்குத் தம் விருப்பம் அறியும் தோழியர் இல்லாத ஊரில் வாழ்தல் இன்பம் தருவதன்று; தம் காதலரைப் பிரிதல் அதனினும் கொடியதாகும்.
1159
தொடிற்சுடின் அல்லது காமநோய் போலவிடிற்சுடல் ஆற்றுமோ தீ.
தன்னைத் தொட்டால் மட்டுமே தீ சுடும்; காமநோய்போலத் தன்னிடமிருந்து அகன்றால் சுடும் வல்லமை அதற்கு உண்டா?
1160
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்பின்இருந்து வாழ்வார் பலர்.
காதலர் பிரிவு பற்றிச் சொல்லியவுடன் அதற்கு உடன்பட்டுப் பிரியும்போது நிகழும் துன்பமாகிய நோயையும் நீக்கி, பிரிந்தபின் அப்பிரிவைத்தாங்கி, அதன் பின்னும் இருந்து உயிர்வாழும் மகளிர் உலகில் பலர். என்னால் அவற்றைச் செய்தல் இயலாது. பிரிவு நேர்ந்தால் நான் உயிர்விடுதல் உறுதி.

ابواب

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

تراجم © سنٹرل انسٹی ٹیوٹ آف کلاسیکل تمل، چنئی · CC BY 4.0 · تِروکُّرل کثیر لسانی ایپ کی صورت میں بھی دستیاب

پہل Government of India وزارتِ تعلیم، حکومتِ ہند
عمل آوری سنٹرل انسٹی ٹیوٹ آف کلاسیکل تمل (CICT)، چنئی