शिक्षा मंत्रालय, भारत सरकार · केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई
काशी तमिल संगमम 5.0
काशी तमिल संगमम 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई · शिक्षा मंत्रालय, भारत सरकार
अभी आवेदन करें
अनुवाद

22 भाषाओं में तिरुक्कुरल

आठवीं अनुसूची की भाषाओं में CICT के अनुवादों के साथ सभी 1,330 कुरल। अध्याय और भाषा चुनें।

← पिछलाअगला →
காமத்துப்பால் · Love › கற்பியல் · The Post-marital love

124. உறுப்புநலன் அழிதல் · Wasting Away

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.
இப்பிரிவாற்றாமை நம்மிடம் நிலைத்திருக்கத் தாம் வேற்றூர் சென்ற காதலரை நினைத்து அழுதால், கண்கள் ஒளியிழந்து, தமக்கு நாணிய மலர்களுக்குத் தாம் நாணம் அடையும்.
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
பசப்பெய்தலோடு, நீரைக்கொட்டும் கண்கள் காதலர் இன்பம் தராமையைப் பிறருக்குச் சொல்லுவனபோலக் காட்சி தருகின்றன.
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
காதலர் கூடியிருந்தபோது இன்பமிகுதியால் பூரித்திருந்த தோள்கள், இன்று அவர் பிரிந்தமையைத் தெளிவாக உணர்த்துவனபோல மெலிந்துள்ளன.
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
அன்றும் துணைவர் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த தோள்கள் இன்று அதற்குமேலே தம் பெருமை இழந்து வளையல்களை இழந்தன.
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
வளைகளும் கழன்று, பழைய இயற்கையழகையும் இழந்த தோள்கள், பிரிந்துசென்று நாட்கள் பலவாகியும் திரும்பாத கொடிய காதலரது கொடுமையைத் தாமே சொல்லும். நான் எவ்வாறு அதனை மறைக்க முடியும்?
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
வளைகள் கழலுமாறு தோள்கள் மெலிய, அவற்றைப் பார்த்து நீ அவரைக் கொடியவர் என்று கூறுதலைத் தாங்காது, நான் என்னுள்ளே துன்புறுகின்றேன்.
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.
நெஞ்சே, கொடியவராகிய என் காதலரிடம் சென்று, என் மெலிகின்ற தோள்களால் விளையும் ஆரவாரத்தைச் சொல்லி, நீ மேம்பாடு எய்தும் வல்லமை உனக்கு உண்டா?
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
தன்னை இறுக அணைத்த கைகளை இவளுக்குத் துன்பம் தருமென்று எண்ணி நான் சற்றே நெகிழ்த்தேனாக, அதுதாங்காது அழகிய வளைகளை அணிந்த பேதையின் நுதல் பசந்தது. அத்தகைய நுதல் இப்பிரிவால் என்ன துன்பம் அடையுமோ?
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
அவளைத் தழுவியிருந்தபோது கைகளைச் சற்றே நெகிழ்த்ததால் சிறுகாற்று நுழைய, அதுபொறாது, பேதையின் குளிச்சியுடைய பெரிய கண்கள் பசப்புற்றன. அவை இப்பிரிவை எவ்வாறு பொறுத்துக்கொண்டிருந்தன?
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
ஒளியுடைய நுதல் விளைத்த பசப்பைப் பார்த்துக் கண்ணின் பசப்பு துன்பம் அடைந்தது.

अध्याय

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

अनुवाद © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल बहुभाषी ऐप के रूप में भी उपलब्ध

पहल Government of India Ministry of Education
कार्यान्वयन Central Institute of Classical Tamil
सहयोग Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti