शिक्षा मंत्रालय, भारत सरकार · केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई
काशी तमिल संगमम 5.0
काशी तमिल संगमम 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई · शिक्षा मंत्रालय, भारत सरकार
हाणे दरख़्वास्त ॾियो
इंटरफ़ेस जो हीउ तर्जुमो हिकु मसौदो आहे ऐं CICT इन जी नज़रसानी करे रहियो आहे। English
तर्जुमा

22 ॿोलियुनि में तिरुक्कुरल

सभेई 1,330 कुरल, अठीं अनुसूचीअ जी ॿोलियुनि में CICT जे तर्जुमनि सां गॾु। बाबु ऐं ॿोली चूंडियो।

← पोयोंअॻियों →
காமத்துப்பால் · Love › கற்பியல் · The Post-marital love

126. நிறையழிதல் · Reserve Overcome

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
நாணமாகிய தாழினைக் கோத்த நிறையென்னும் கதவைக் காமவேட்கையாகிய கணிச்சி முறித்தது.
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
எல்லாரும் செயலற்றிருக்கும் நள்ளிரவிலும் என் நெஞ்சத்தைத் தண்டித்துச் செயல்படச் செய்கின்றது. எனவே, காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று இரக்கமற்றது.
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
நான் காமத்தை என்னுள்ளே மறைக்க முயல்வேன்; ஆனால், இது குறிப்பறியாது, தும்மல்போல் அடங்காது வெளிப்படும்.
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.
நான் என்னை நிறையுடையவள் என்று எண்ணியிருந்தேன்; ஆனால், என் காமம் இன்று மறைத்தலைத் தாண்டிப் பலரும் அறிய வெளிப்பட்டது.
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.
தம்மைவிட்டு நீங்கிச்சென்ற காதலரின்பின் செல்லாமல், தாமும் அகன்றிருக்கும் நிறையுடைமை காமநோய்கொண்டார் அறியாத ஒன்றாகும்.
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
என்னைவிட்டு நீங்கிச்சென்றவர்பின் நான் செல்லவேண்டும் என்று வேண்டுவதால், நான் அடையும் துன்பம் எத்தன்மையது?
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.
நம்மால் விரும்பப்பட்டவர் நம்மிடம் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்தால், நாணம் என்னும் ஒன்றையும் நாம் அறியமாட்டோம்.
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.
நம் நிறையாகிய அரணை அழிக்கும் படை பல பொய்களைச் சொல்லவல்ல கள்வனுடைய பணிவான சொற்கள் அல்லவா? அச்சொற்களால் நம் நிறை அழிந்தது.
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
காதலர் வந்தபோது புலத்தலைச் செய்ய எண்ணி முன்னில்லாது வேறிடம் சென்றேன். ஆனால், என் நெஞ்சம் நிறையில் நில்லாது அவரோடு கலத்தலைத் தொடங்குவதை அறிந்து அதனைக் கட்டுப்படுத்த இயலாது அவரை அணைத்துக்கொண்டேன்.
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
கொழுப்பைத் தீயிலிட்டால் அது உருகுவதுபோல் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் மனத்தை உடைய மகளிர்க்கு அவர் புணர நாம் ஊடியிருந்து, பின்பு ஊடலில் நிலைத்துநிற்போமென்று கருதுதல் இயலுமோ? இயலாது.

बाब

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

तर्जुमा © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल घण-ॿोली ऐप जे रूप में बि मौजूद

पहल कंदड़ Government of India Ministry of Education
अमल कंदड़ Central Institute of Classical Tamil
साथ ॾींदड़ Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti