शिक्षण मंत्रालय, भारत सरकार · केंद्रीय अभिजात तमिळ संस्था (CICT), चेन्नई
काशी तमिळ संगमम 5.0
काशी तमिळ संगमम 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
केंद्रीय अभिजात तमिळ संस्था (CICT), चेन्नई · शिक्षण मंत्रालय, भारत सरकार
आतांच अर्ज करात
इंटरफेसाचो हो अणकार मसुदो आसा आनी CICT कडल्यान ताची तपासणी चालू आसा. English
अणकार

22 भासांनी तिरुक्कुरल

आठवे वळेरेंतल्या भासांनी CICT च्या अणकारांसयत सगळे 1,330 कुरल. अध्याय आनी भास निवडात.

← आदलेंफुडलें →
காமத்துப்பால் · Love › கற்பியல் · The Post-marital love

127. அவர்வயின் விதும்பல் · Mutual Desire

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
காதலர் பிரிந்துபோன நாட்களைச் சுவரில் குறித்து அவற்றைத் தொட்டு எண்ணுதலால் என் விரல்கள் தேய்ந்துபோயின. அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளியிழந்து நுண்ணிய பொருள்களைக் காண இயலாதவை ஆயின. ஆனாலும் அவர் வரவு இன்னும் நிகழவில்லை.
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
ஒளிவீசும் அணிகளை உடையவளே, காதலரை இன்று நான் மறந்தால், தோள்கள் அழகிழந்து மெலியும்; தோள்களைவிட்டு அணிகளும் கழலும்.
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
இன்பம் நுகர்தலை விரும்பாது, நான் துணையாதலை இகழ்ந்து அவரது ஊக்கமே துணையாகச் சென்றவர், இங்கு வருதலை நான் விரும்புவதால் இன்னும் உயிர்வாழ்கின்றேன்.
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.
காமம் நீங்கியவராய் என்னைப் பிரிந்துசென்றவர் காமத்துடன் என்னிடம் வருதலை நினைத்து என் நெஞ்சு வருத்தம்நீங்கி, மரக்கிளைகள்தோறும் ஏறிப்பார்க்கின்றது.
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
என் காதலரைக் கண்ணாரக் கண்டபின் என் மெல்லிய தோள்களின் பசப்பு நீங்கும்; எனவே, காதலரைக் கண்ணாரக் காண்பேனாக.
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
இவ்வளவு நாட்களும் வராத கொண்கன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்தால் துன்பம் தரும் இந்நோய் கெட, அந்த இன்பமாகிய அமிழ்தை வாயில்கள் ஐந்தாலும் பருகுவேன்.
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.
கண்போல் சிறந்த காதலர் வருவாரானால், நான் ஊடுவேனா? அவரைத் தழுவுவேனா? அவ்விரு செயல்களையும் செய்வேனா? என்செய்வேன்?
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
அரசன் போர்புரிந்து வெல்வானாக; நாமும் மனைவியிடம் சென்று கூடி, மாலைப் பொழுதின்கண் விருந்து துய்ப்போமாக.
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
வெகுதொலைவு சென்று, தம் காதலர் மீண்டுவரக் குறித்த நாளைக்கருதி அது வரும்வரையில் உயிர்தாங்கிவாழும் பெண்களுக்கு ஒருநாள் பலநாள்போல நெடிதாகும்.
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
காதலி நம் பிரிவினைத் தாங்க இயலாது உள்ளம் உடைந்து இறப்பாளாயின் நம்மைப்பெறக் கடவளானால் என்ன? பெற்றால் என்ன? மெய்யுறக் கலந்தால்தான் என்ன? இவை ஒன்றாலும் எப்பயனும் இல்லையாம்.

अध्याय

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

अणकार © केंद्रीय अभिजात तमिळ संस्था, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल भोवभाशीक ॲप म्हूण लेगीत उपलब्ध

उपक्रम Government of India Ministry of Education
अंमलबजावणी Central Institute of Classical Tamil
सहकार्य Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti