মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার · সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই
কাশী তামিল সঙ্গমম 5.0
কাশী তামিল সঙ্গমম 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই · মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার
হৌজিক এপ্লাই তৌবিয়ু
ইন্টরফেসকী হন্দোকপা অসি দ্রাফ্ট অমনি অমসুং CICT না য়েংশিল্লি। English
হন্দোকপশিং

লোল 22 দা তিরুক্কুরল

কুরল 1,330 পূম্নমক, 8শুবা সিদিউলগী লোলশিংদা CICT না হন্দোকপগা লোয়ননা। তাংকক অমা অমসুং লোল অমা খনবিয়ু।

← মমাঙগীমথংগী →
அறத்துப்பால் · Virtue › இல்லறவியல் · Domestic Virtue

16. பொறையுடைமை · The Possession of Patience, Forbearance

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
தன்னைத் தோண்டுவாரைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்ளும் நிலம்போன்று, தம்மை அவமதிப்பவரையும் பொறுத்தல் தலைசிறந்த அறமாகும்.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
பிறர்செய்த மிகையான தீமையைப் பழிதீர்க்கமுடிந்த காலத்தும் பொறுத்தல் வேண்டும். அத்தீமையை உள்ளத்தில் கொள்ளாது மறந்துவிடல் பொறுத்தலினும் நன்றாம்.
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக்கொள்ளாது நீக்குதல்; அதுபோல, வன்மையுள் வன்மையாவது அறிவில்லாமல் தீமை செய்தவரைப் பொறுத்தல்.
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.
ஒருவன் சான்றாண்மை தன்னிடமிருந்து நீங்காதிருத்தலை வேண்டுவானாயின், அவன் பொறையுடைமையைத் தன்னிடமிருந்து அழியாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
ஒருவன் தமக்குத் தீமை செய்தபோது அவனை மன்னிக்காது தண்டித்தவரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். அவனை மன்னித்தவரைப் பொன்போல் மனத்தில் வைத்துக்கொள்வர்.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
தமக்குத் தீங்குசெய்த ஒருவனைத் தண்டித்தலால் விளைவது அவர்களுக்கு ஒருநாள் இன்பமே; அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
செய்யத்தகாத கொடிய தீங்கைத் தனக்குப் பிறர் செய்தாலும், அவர்களுக்கு அதனால்வரும் துன்பத்திற்கு வருந்தி அறமல்லாதவற்றை ஒருவன் செய்யாதிருத்தல் நல்லது.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
உள்ளச் செருக்கால் தமக்குத் தீமை செய்தவரைத் தாம் தம் பொறையுடைமையால் வெல்லல் வேண்டும்.
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
நன்னெறியைக் கடந்தவரின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் இல்லறத்தில் இருப்பவரேனும் துறவியர்போலத் தூய்மை உடையவராவர்.
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
தம்மைப் பிறர் சொல்லும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், உணவைத் தவிர்த்து உற்ற நோன்பை மேற்கொள்ளும் பெரியவரினும் பெரியவர் ஆவர்.

তাংককশিং

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

হন্দোকপশিং © সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0 · তিরুক্কুরল মল্টিলিঙ্গুয়েল এপ ওইনসু ফংই

খোঙথাং লৌখৎলিবা Government of India Ministry of Education
পাঙথোক্লিবা Central Institute of Classical Tamil
খূৎ শম্নরিবা Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti