शिक्षण मंत्रालय, भारत सरकार · केंद्रीय अभिजात तमिळ संस्था (CICT), चेन्नई
काशी तमिळ संगमम 5.0
काशी तमिळ संगमम 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
केंद्रीय अभिजात तमिळ संस्था (CICT), चेन्नई · शिक्षण मंत्रालय, भारत सरकार
इंटरफेसाचो हो अणकार मसुदो आसा आनी CICT कडल्यान ताची तपासणी चालू आसा. English
फाटीं
अणकार

22 भासांनी तिरुक्कुरल

आठवे वळेरेंतल्या भासांनी CICT च्या अणकारांसयत सगळे 1,330 कुरल. अध्याय आनी भास निवडात.

तिरुक्कुरल अभ्यास सांगात्याक विचारात →

← आदलेंफुडलें →
அறத்துப்பால் · Virtue › இல்லறவியல் · Domestic Virtue

19. புறங்கூறாமை · Not Backbiting

संगणकाचो आवाज तमिळ मजकूर वाचता.
181
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறங்கூறான் என்றல் இனிது.
ஒருவன் அறமென்று சொல்லப்பட்டதைச் செய்யாது, அறம் அல்லாதவற்றைச் செய்வானாயினும், பிறரைப் புறம் கூறமாட்டான் என்று உலகத்தாரால் சொல்லப்படுவது நன்று.
182
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகை.
ஒருவனைக் காணாதபோது இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லி அவனைக் கண்டபோது பொய்யாக நகையாடுதல், அறமென்பது ஒன்று இல்லையென்று அழித்துச் சொல்லி அதன்மேல் அறமற்றவற்றைச் செய்தலினும் தீதாகும்.
183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்அறங்கூறும் ஆக்கந் தரும்.
பிறரைக் காணாதபோது புகழ்ந்துபேசி, அவரைக் கண்டபோது அவருக்கு இனியனாகப் பொய்கூறி ஒருவன் உயிர் வாழ்தலைக்காட்டிலும் சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் நன்மையைக் கொடுக்கும்.
184
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்கமுன்னின்று பின்நோக்காச் சொல்.
ஒருவன் எதிரேயிருக்க அவனைப்பற்றி இரக்கமில்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாதபோது பின்னால் விளையும் குற்றத்தைக் கருதாது பேசுதல் கூடாது.
185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்.
ஒருவன் அறத்தை நல்லதென்று சொன்னாலும் அதை அவன் மனத்திலிருந்து சொல்லவில்லையென்பதை, அவன் புறம்பேசுதற்குக் காரணமான புன்மனத்தால் அறியலாம்.
186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும்.
பிறனொருவனின் பழியை அவனில்லாதபோது கூறுபவனுடைய பழிகள் பலவற்றுள்ளும் கொடியவற்றைத் தெரிந்து அவை பிறரால் கூறப்படும்.
187
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்பாடல் தேற்றா தவர்.
இனிய சொற்களைப் பேசி அயலாரோடு கூடியிருந்து மகிழும் நட்பாடலை அறியாதவர்கள், புறங்கூறித் தம் உறவினரையும் தம்மைவிட்டு நீங்கச்செய்வர்.
188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்என்னைகொல் ஏதிலார் மாட்டு.
தம்மோடு நெருங்கியிருந்தாரது குற்றத்தையும் அவரில்லாதபோது தூற்றும் இயல்பினை உடையவர் அயலாரிடம் செய்வது யாதோ?
189
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்புன்சொல் உரைப்பான் பொறை.
பிறர் நீங்கியபோது அவரை இழித்துரைப்பானது உடல் பாரத்தை, நிலமானது இக்கொடியதைத் தாங்குதலே அறமென்று எண்ணிப் பொறுத்துக்கொள்கின்றதுபோலும்!
190
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
பிறரைப் புறங்கூறுவார், அவர் குற்றத்தைப்போலத் தம் குற்றத்தையும் காண வல்லவரானால் அவர்களுடைய நிலையான உயிர்க்கு வரும் துன்பமும் உண்டோ?

अध्याय

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

अणकार © केंद्रीय अभिजात तमिळ संस्था, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल भोवभाशीक ॲप म्हूण लेगीत उपलब्ध

उपक्रम Government of India शिक्षण मंत्रालय, भारत सरकार
अंमलबजावणी केंद्रीय अभिजात तमिळ संस्था (CICT), चेन्नई