মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার · সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই
কাশী তামিল সঙ্গমম 5.0
কাশী তামিল সঙ্গমম 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই · মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার
ইন্টরফেসকী হন্দোকপা অসি দ্রাফ্ট অমনি অমসুং CICT না য়েংশিল্লি। English
হনবা
হন্দোকপশিং

লোল 22 দা তিরুক্কুরল

কুরল 1,330 পূম্নমক, 8শুবা সিদিউলগী লোলশিংদা CICT না হন্দোকপগা লোয়ননা। তাংকক অমা অমসুং লোল অমা খনবিয়ু।

তিরুক্কুরল তম্নবগী মরূপতা হংবিয়ু →

← মমাঙগীমথংগী →
அறத்துப்பால் · Virtue › துறவறவியல் · Ascetic Virtue

25. அருளுடைமை · Compassion

তামিল অসি কম্প্যুটরগী খোনজেলনা পাবনি।
241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணும் உள.
செல்வங்கள் யாவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வம் அருளாகிய செல்வமே; பொருளால் வரும் செல்வங்கள் யாவும் இழிந்தாரிடமும் இருப்பவை.
242
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணை.
நல்ல நெறியில் நின்று தமக்குத் துணையாகும் அறம் எதுவென்று ஆராய்ந்தறிந்து அருள் உடையராதல் வேண்டும். சமயநெறிகள் எல்லாவற்றாலும் ஆய்ந்தாலும் அருளே துணையாகும் என்பதை அறியலாம்.
243
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்.
அருள் நிறைந்த நெஞ்சத்தை உடையவர்களுக்கு இருள் நிறைந்த துன்ப உலகத்துள் புகுதல் என்பது இல்லை.
244
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்பதன்னுயிர் அஞ்சும் வினை.
நிலைபெற்றிருக்கும் உயிர்களைப் பேணி அவற்றிடம் அருள் உடையவனுக்கு அவன் உயிர் அஞ்சுதற்குக் காரணமாகிய தீவினைகள் இல்லையென்று உயர்ந்தோர் கூறுவர்.
245
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்மல்லன்மா ஞாலங் கரி.
அருள் உடையவர்க்கு ஒரு துன்பமும் உண்டாகாது; அதற்குக் காற்று இயங்குகின்ற, வளமுடைய பெரியவுலகில் வாழ்வார் சான்றாவார்.
246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார்.
உயிர்களிடம் காட்டும் அருளைத் தவிர்த்துக் கொடுமைகளைச் செய்கின்றவரை, அறமாகிய உறுதிப்பொருளைச் செய்யாது தாம் துன்புறுவதை மறந்தவரென்று நல்லோர் சொல்லுவர்.
247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்குஇவ்வுலகம் இல்லாகி யாங்கு.
பொருளற்றவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லையாதல்போல, உயிர்களிடம் அருள் அற்றவர்க்கு மேலுலக இன்பம் இல்லை.
248
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்அற்றார்மற் றாதல் அரிது.
வறியவர் வறுமை நீங்கி ஒருகாலத்தில் செல்வம்பெற்றுப் பொலிவர். ஆனால், அருள் இல்லாதவர் அழிந்தவரே ஆவார்; பின்னொரு காலத்திலும் அவர் அருளைப்பெறுதல் அரிதாகும்.
249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம்.
அருளற்றவன் செய்யும் அறத்தை ஆராய்ந்தால், அது பேரறிவு அற்றவன் மெய்ந்நூலில் சொல்லும் பொருளை உணர்ந்தது போன்றது.
250
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்மெலியார்மேல் செல்லு மிடத்து.
அருளற்றவன் தன்னினும் எளியாரைத் தாக்கச் செல்லும்போது தன்னைவிட வலியார் தன்னைத் தாக்க வரும்போது அவர்முன் தான் அச்சமுற்று நிற்கும் நிலையினை எண்ணிப்பார்த்தல் வேண்டும்.

তাংককশিং

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

হন্দোকপশিং © সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0 · তিরুক্কুরল মল্টিলিঙ্গুয়েল এপ ওইনসু ফংই

খোঙথাং লৌখৎলিবা Government of India মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার
পাঙথোক্লিবা সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই
খূৎ শম্নরিবা ইন্দিয়ান ইনষ্টিট্যুট ওফ টেক্নোলোজী মদ্রাসkashitamil.iitm.ac.in  বনারস হিন্দু য়ুনিভর্সিটি, বারানসীkashitamil.bhu.edu.in  ভারতীয় ভাষা সমিতি