अणकार
22 भासांनी तिरुक्कुरल
आठवे वळेरेंतल्या भासांनी CICT च्या अणकारांसयत सगळे 1,330 कुरल. अध्याय आनी भास निवडात.
அறத்துப்பால் · Virtue › துறவறவியல் · Ascetic Virtue
37. அவா அறுத்தல் · Curbing of Desire
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
தவாஅப் பிறப்பீனும் வித்து.
அவா என்பது எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் அழியாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் விதை என்று நூலோர் கூறுவர்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
வேண்டாமை வேண்ட வரும்.
பிறப்பால் துன்பமே என்ற உண்மையை அறிந்தவன் ஒன்றை வேண்டினால், அது பிறவி எடுக்காமையையே ஆகும்; பிறவாமையானது ஒரு பொருளையும் விரும்பாமையை வேண்ட, அவனைத் தானாக வந்து சேரும்.
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.
ஆண்டும் அஃதொப்பது இல்.
ஒரு பொருள்மேலும் ஆசைகொள்ளாமையை ஒத்த சிறப்பான செல்வம் வேறெதுவும் இவ்வுலகில் இல்லை. அதுமட்டுமன்றி, அத்தகைய செல்வம் விண்ணுலகிலும் இல்லை.
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
வாஅய்மை வேண்ட வரும்.
அவா இல்லாமையே ஒருவர்க்குத் தூய்மை என்று சொல்லப்படும்; அவா இல்லாமை மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாகும்.
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
அற்றாக அற்றது இலர்.
பிறவியற்றவர் என்று சொல்லப்படுபவர் அவாவினை நீக்கியவரே ஆவார்; பிறவற்றை நீக்கியவர் அவர்போன்று, பிறவியற்றவர் ஆகார்.
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
வஞ்சிப்ப தோரும் அவா.
ஒருவனை வீழ்த்திக் கெடுக்கவல்லது அவா; ஆதலால், அவாவிற்கு அஞ்சித் தன்னைக் காத்துக்கொள்ளுதலே அறமாகும்.
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
தான்வேண்டு மாற்றான் வரும்.
ஒருவன் அவாவிற்கு அஞ்சி அதனை முற்றும் அழிக்க வல்லவனானால், அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை அவன் விரும்பும் வழியில் உண்டாகும்.
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
தவாஅது மேன்மேல் வரும்.
ஆசை இல்லாதவர்க்கு வரக்கூடிய துன்பம் ஒன்றுமில்லை; ஆசை இருக்குமானால் அதனால் எல்லாத் துன்பங்களும் இடைவிடாது மேலும் மேலும் உண்டாகும்.
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
துன்பத்துள் துன்பங் கெடின்.
அவாவென்று சொல்லப்படும் துன்பங்களுள் எல்லாம் கொடிய துன்பம் கெடுமானால், இங்கும் இன்பங்கள் இடையறாது பெருகும்.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
பேரா இயற்கை தரும்.
ஒருபோதும் தீராத இயல்பினையுடைய அவாவினை ஒருவன் நீக்குவானேயானால், அவ்வாறு நீத்தல் அப்பொழுதே எக்காலத்தும் ஒரு நிலைமை உடையவனாகும் இயல்பைக் கொடுக்கும்.
अध्याय
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
अणकार © केंद्रीय अभिजात तमिळ संस्था, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल भोवभाशीक ॲप म्हूण लेगीत उपलब्ध



