शिक्षा मंत्रालय, भारत सरकार · केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई
काशी तमिल संगमम 5.0
काशी तमिल संगमम 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई · शिक्षा मंत्रालय, भारत सरकार
अभी आवेदन करें
अनुवाद

22 भाषाओं में तिरुक्कुरल

आठवीं अनुसूची की भाषाओं में CICT के अनुवादों के साथ सभी 1,330 कुरल। अध्याय और भाषा चुनें।

← पिछलाअगला →
பொருட்பால் · Wealth › அரசியல் · Royalty

40. கல்வி · Learning

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
கற்கப்படும் நூல்களை ஒருவன் பழுதில்லாமல் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றதால் அக்கல்விக்கேற்ப, அந்நூல்கள் சொல்லுகின்ற நெறியில் நடத்தல் வேண்டும்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
எண்ணென்றும் எழுத்தென்றும் சொல்லப்படும் கலைகள் இரண்டும் சிறப்புடைய உயிர்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
கல்வியறிவு உடையவரே கண்ணுடையவர் என்று உயர்வாகச் சொல்லப்படுவார்கள்; கல்வியறிவு இல்லாதவர் முகத்தில் புண்கள் இரண்டை உடையவராகக் கருதப்படுவர்.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
யாவரையும் அவர் மகிழுமாறு சேர்ந்திருந்து, இனி இவரை எவ்வாறு காணப் போகிறோமென்று வருந்துமாறு பிரிதலாகிய தன்மை உடையது கற்றவர் தொழில்.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
செல்வர்முன் வறியவர் நிற்பதுபோன்று ஆசிரியர்முன் தாம் ஆசையால் தாழ்ந்திருந்து கற்றார் தலையாயவர். அவ்வாறு பணிந்திருத்தலுக்கு நாணம் கொண்டு கல்லாதவர் இழிந்தோராவர்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
மணலில் கேணி தோண்டிய அளவு ஊறும்; அதுபோல், மக்களுக்கு அறிவு, கற்ற கல்வி அளவு பெருகும்.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
கற்றவனுக்குத் தன் நாடும், தன் ஊரும் மட்டுமன்றி, எந்த நாடும் அவன் நாடாகும்; எந்த ஊரும் அவன் ஊராகும். அவ்வாறிருக்கும்போது, ஒருவன் இறக்குமளவும் தொடர்ந்து கல்லாது நாட்களைக் கழிப்பது ஏன்?
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
ஒருவனுக்கு ஒரு பிறவியில் கற்ற கல்வியானது ஏழு பிறவியிலும் சென்று உதவும்.
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
தாம் இன்பம் அடைதற்குக் காரணமாகிய கல்வியால் உலகத்தாரும் இன்பம் அடைதலால் கல்வியறிவு உடையார் மேலும் மேலும் கற்றலையே விரும்புவர்.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
கல்வி ஒருவனுக்கு அழிவில்லாத சிறப்புடைய செல்வமாகும். மணியும் பொன்னும்போன்ற பிறவெல்லாம் செல்வம் ஆகா.

अध्याय

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

अनुवाद © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल बहुभाषी ऐप के रूप में भी उपलब्ध

पहल Government of India Ministry of Education
कार्यान्वयन Central Institute of Classical Tamil
सहयोग Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti