शिक्षा मंत्रालय, भारत सरकार · केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई
काशी तमिल संगमम 5.0
काशी तमिल संगमम 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई · शिक्षा मंत्रालय, भारत सरकार
एखने आवेदन करू
इंटरफेसक ई अनुवाद एखन प्रारूप मात्र अछि आ CICT द्वारा एकर समीक्षा कएल जा रहल अछि। English
अनुवाद

22 भाषा मे तिरुक्कुरल

आठम अनुसूचीक भाषा सभ मे CICT केर अनुवादक संग सभ 1,330 कुरल। अध्याय आ भाषा चुनू।

← पछिलाअगिला →
பொருட்பால் · Wealth › அரசியல் · Royalty

48. வலியறிதல் · The Knowledge of Power

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
தான் செய்ய எண்ணிய வினையின் வலியையும், தன் வலியையும், பகைவனின் வலியையும், இருவர்க்கும் துணையாவார் வலியையும் சீர்தூக்கிப்பார்த்துத் தன் வலி பகைவனின் வலியைவிடவும் மிகுமாயின், அவ்வினையை மேற்கொள்ளலாம்.
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
தனக்கு இயலும் வினையையும் அதற்கு வேண்டிய வலியையும் அறிந்து எப்போதும் மனம், மொழி, மெய் ஆகியவற்றை அதன்பால் செலுத்திச் செயல் மேற்கொள்வார்க்கு முடியாத செயல் இல்லை.
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
தம் வலிமையின் அளவறியாமல் மன எழுச்சியால் தம்மினும் வலியாரைப் பகைக்கத் தொடங்கித் தாம் எண்ணியதைச் செய்து முடிக்க இயலாது இடையில் கெட்ட அரசர் பலராவர்.
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
பிற மன்னர்களோடு இணைந்து நடத்தலைச் செய்யாமல், தன் வலிமையின் அளவும் அறியாது, தன்னை வியந்து அவரோடு பகைகொள்ளும் அரசன் விரைவில் கேடு அடைவான்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
மயில்பீலியை ஒரு வண்டி பொறுக்குமளவிற்கும் அதிகமாக ஏற்றினால் அவ்வண்டியின் அச்சு முறியும்.
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிநின்றார் தம் ஊக்கத்தால் அதனையும் தாண்டி மேலும் மேலும் ஏற முயல்வாராயின் அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும்.
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
பிறர்க்கு ஈதலைச் செய்யும்போது தனக்குரிய பொருளின் அளவறிந்து ஈய வேண்டும். அவ்வாறு ஈதலே பொருளைப் பேணி நடக்கும் நெறியாகும்.
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
ஒருவனுக்குப் பொருள் வருகின்ற வழியின் அளவு சிறிதாயினும் அது போகின்ற வழி அதனினும் பெரிதாகாதபோது அவனுக்கு விளையும் கேடு ஏதுமில்லை.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
தனக்குள்ள செல்வத்தின் அளவறிந்து அதற்கேற்ப வாழாதவனின் வாழ்க்கை உள்ளது போலத் தோன்றி, இல்லாமல்போய்ப் பின்னர் அத்தோற்றமும் இல்லாது கெடும்.
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
தனக்குள்ள அளவு செல்வத்தைக் கடந்து, பிறர்க்கு உதவும் தன்மையால் ஒருவனது செல்வத்தின் அளவு விரைந்து கெடும்.

अध्याय सभ

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

अनुवाद © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल बहुभाषी ऐपक रूप मे सेहो उपलब्ध

पहल Government of India Ministry of Education
कार्यान्वयन Central Institute of Classical Tamil
सहयोग Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti