Translations
Thirukkural in 22 languages
All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.
பொருட்பால் · Wealth › அரசியல் · Royalty
51. தெரிந்து தெளிதல் · Selection and Confidence
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
திறந்தெரிந்து தேறப் படும்.
ஒருவனை அரசன் அறம், பொருள், இன்பம், உயிர் காரணமாக வரும் அச்சம் ஆகிய நான்கின் திறத்தால் ஆராய்ந்தறிந்து பின்பு தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.
நாணுடையான் சுட்டே தெளிவு.
நல்ல குடியில் பிறந்து, குற்றங்களிலிருந்து விலகி, தனக்கு ஊறு நேருமோவென்று அஞ்சாது செயல்படுபவனும், இழிதொழில்களில் மனம் செல்ல நாணம் அடைவோனும் ஆகிய ஒருவனையே அரசன் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
இன்மை அரிதே வெளிறு.
நுண்ணிதாக ஆராய்ந்து பார்த்தால் அரியநூல்களைக் கற்று, குற்றங்களற்றவரிடமும் அறியாமை இல்லாமை அரியதாகும்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
மிகைநாடி மிக்க கொளல்.
ஒருவனது குணங்களை ஆராய்ந்து, குற்றங்களையும் ஆராய்ந்து, குணம்மிக்கவனாயின் பணிக்கு ஏற்றவனென்றும் குற்றம்மிக்கவனாயின் பணிக்குத் தகுதியுடையவன் அல்லனென்றும் முடிவுசெய்தல் வேண்டும்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
கருமமே கட்டளைக் கல்.
ஒருவரது பெருமைக்கும் சிறுமைக்கும் உரைகல்லாவது அவரது செயலே ஆகும்.
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
பற்றிலர் நாணார் பழி.
சுற்றமில்லாதவரைத் தேர்ந்தெடுத்தல் தவிர்க்கப்படவேண்டியதாகும். ஏனெனில், அவர் உலகத்தாரோடு தொடர்பற்றவர்; பழிக்கு அஞ்சாதவர்.
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.
பேதைமை எல்லாந் தரும்.
அன்பு காரணமாக, அறியவேண்டுவனவற்றை அறியாதாரை அரசன் தேர்ந்தெடுப்பின், அது அரசனுக்கு எல்லா அறியாமையையும் கொடுக்கும்.
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
தீரா இடும்பை தரும்.
தன்னோடு இயைபு அற்றவனை ஆராயாது ஓர் அரசன் பணிசெய்யத் தேர்ந்தெடுப்பானானால், அச்செயலால் அவனுடைய குடிப்பிறந்தாரும் துன்பம் அடைவர்; அவரும் பகைவர் கைப்பட்டு வீழ்வார்கள்.
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
தேறுக தேறும் பொருள்.
யாரையும் ஆராயாது நம்புதல் கூடாது; ஆராய்ந்தபின் நம்பும் பொருள்களை ஐயுறுதல் கூடாது.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
தீரா இடும்பை தரும்.
ஒருவனை ஆராயாது நம்புதலும், ஆராய்ந்து நம்பியவனை ஐயமுறுதலும் அரசனுக்குத் தீராத துன்பத்தைக் கொடுக்கும்.
Chapters
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App



