अनुवाद
22 भाषाओं में तिरुक्कुरल
आठवीं अनुसूची की भाषाओं में CICT के अनुवादों के साथ सभी 1,330 कुरल। अध्याय और भाषा चुनें।
பொருட்பால் · Wealth › அரசியல் · Royalty
52. தெரிந்து வினையாடல் · Selection and Employment
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
தன்மையான் ஆளப் படும்.
ஆவனவும் ஆகாதனவுமாகிய செயல்களை ஆராய்ந்தறிந்து ஆவனவற்றை விரும்பிய இயல்புடையவனை மேலும் அச்செயல்களிலேயே ஈடுபடுத்த வேண்டும்.
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
ஆராய்வான் செய்க வினை.
பொருள் வரும் வழிகளை விரிவாக்கி, அப்பொருளால் செல்வங்களை வளர்த்து, அவ் வழிகளுக்கும் பொருளுக்கும் செல்வங்களுக்கும் நேரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே அரசனுக்குப் பணிசெய்தல் வேண்டும்.
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
நன்குடையான் கட்டே தெளிவு.
அரசனிடம் அன்பும், அவனுக்கு நன்மை பயப்பதை அறியும், அறிவும் அதனைச் செய்யும் போது கலங்காமையும், அவ்வாறு சேரும் பொருளின்மேல் ஆசையில்லாமையும் ஆகிய நான்கு குணங்களையும் நிலைபெற உடையவனையே அரசன் நம்பிச் செயல்படல் வேண்டும்.
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
வேறாகும் மாந்தர் பலர்.
அரசன் எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து பணியைத் தந்தபின்னும் அப்பணியின் இயல்பால் வேறுபடுகின்ற மாந்தர் உலகில் பலராவர்.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
செய்வனவற்றை அறிந்து, செயலாலும் இடையூறுகளாலும் வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு, முடிவுசெய்ய வல்லவனை அல்லாமல், வினையானது ‘இவன் நம்மிடம் அன்புடையவன்’ என்று அரசன் வேறொருவனை ஏவும் தன்மையுடையதன்று.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
எய்த உணர்ந்து செயல்.
முதலில் செய்வானது குணத்தை ஆராய்ந்து, பின்னர்ச் செய்யப்படும் செயலின் தன்மையை ஆராய்ந்து, பின் அவனையும் அச்செயலையும் காலத்தோடு இணைத்து அறிந்து, அவனை அச்செயலை மேற்கொள்ளுமாறு ஏவல் வேண்டும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
அதனை அவன்கண் விடல்.
இச்செயலை இக்கருவியால் இவன் முடிக்க வல்லவன் என்று ஆராய்ந்து, அச்செயலை அவனிடம் ஒப்படைத்தல் வேண்டும்.
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
அதற்குரிய னாகச் செயல்.
ஒருவனை அரசன் ஒரு செயலுக்கு உரியவனாக ஆராய்ந்து முடிவுசெய்வானாயின் அவனை அச்செயலுக்கு முழுமையும் உரியவனாக ஆக்குதல் வேண்டும்.
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.
நினைப்பானை நீங்கும் திரு.
எப்போதும் தன் செயலில் ஈடுபாடுகொண்டு முயல்பவன் அந்த உரிமையால் அரசனுக்கு நெருக்கமாக இருக்கின்ற தன்மையைப் பொறுத்துக் கொள்ளமுடியாதவரது சொல்லைக்கேட்டு, அரசன் அவனைத் தவறாக மதிப்பிடுவானானால், செல்வம் அவனைவிட்டு நீங்கும்.
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
கோடாமை கோடா துலகு.
அரசனது வினைமேற்கொள்வான் ஒருவன் தவறுசெய்தாலொழிய, உலகம் தவறிழைக்காது. ஆதலால், அரசன் அவன் செயலை நாள்தோறும் ஆராய்தல் வேண்டும்.
अध्याय
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
अनुवाद © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल बहुभाषी ऐप के रूप में भी उपलब्ध



