शिक्षा मंत्रालय, भारत सरकार · केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई
काशी तमिल संगमम 5.0
काशी तमिल संगमम 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
केंद्रीय शास्त्रीय तमिल संस्थान (CICT), चेन्नई · शिक्षा मंत्रालय, भारत सरकार
अभी आवेदन करें
अनुवाद

22 भाषाओं में तिरुक्कुरल

आठवीं अनुसूची की भाषाओं में CICT के अनुवादों के साथ सभी 1,330 कुरल। अध्याय और भाषा चुनें।

← पिछलाअगला →
பொருட்பால் · Wealth › அரசியல் · Royalty

53. சுற்றந் தழால் · Cherishing Kinsmen

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
ஒருவன் செல்வம் இழந்து, வறியவனாயபோதும் விடாது அவனிடம் அவன் தமக்கு முன் செய்த உதவியை எடுத்துக்கொண்டாடுதல் சுற்றத்தாரிடம் மட்டுமே காணப்படுவதாகும்.
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
அன்பு நீங்காத உறவினர் ஒருவனுக்குக் கிடைப்பராயின், அது அவனுக்கு மேன்மேலும் பெருகும் செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
சுற்றத்தாரோடு நெஞ்சம் கலந்து உறவாடாதவன் வாழ்க்கை, குளப்பரப்பானது கரையின்றி நீர் நிறைந்தாற்போன்றது.
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
ஒருவன் செல்வம்பெற்றதன் பயன் உறவினரால் தான் சூழப்படும் வகையில் அவரை அணைத்துக்கொண்டு ஒழுகுதலாம்.
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
ஒருவன் தன் உறவினர்க்கு வேண்டுவன கொடுத்தலிலும் இன்சொல் பேசுதலிலும் வல்லவனாயின், அவன் சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமென்று பலவகைச் சுற்றத்தால் சூழப்படுவான்.
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.
ஒருவன் பெருங்கொடையாளனாய், சினம்கொள்ளாதவனாய் இருப்பானேல், அவனைக் காட்டிலும் சுற்றம் மிக உடையார் உலகில் இல்லை.
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
காக்கைகள் தமக்குரிய உணவைக் கண்டபோது மறையாது, தம் இனத்தை அழைத்து அதனோடும் கூட உண்ணும்; அத்தகைய இயல்பினை உடையவர்களுக்கே சுற்றத்தாரோடு அடையும் ஆக்கங்களும் உளவாகும்.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
எல்லாரையும் ஒரே தன்மையாக நோக்காமல், அரசன் அவரவர் தகுதிக்கேற்ப நோக்குவானானால், அச்சிறப்பைக் கருதி அவனைச் சூழ்ந்து வாழும் உறவினர் பலராவார்.
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
முன் தன்னைச் சூழ்ந்திருந்து, தன்னோடு சேராது, ஏதோவொரு காரணத்தால் தன்னைப் பிரிந்துபோன உறவினர்கள் பின் வந்து சூழ்ந்துகொள்ளுதல், அவர்கள் மனம் பொருந்தாமைக்குரிய காரணம் தன்னைவிட்டு நீங்கியதாலாகும்.
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத் திருந்து எண்ணிக் கொளல்.
காரணமின்றித் தன்னிடமிருந்து நீங்கிப் பிரிந்துபோய்ப் பின் காரணத்தால் வந்த உறவினனை, அரசன் அவன் வேண்டியதைச் செய்து ஆராய்ந்து அவனைத் தழுவிக்கொள்ளுதல் வேண்டும்.

अध्याय

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

अनुवाद © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल बहुभाषी ऐप के रूप में भी उपलब्ध

पहल Government of India Ministry of Education
कार्यान्वयन Central Institute of Classical Tamil
सहयोग Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti