ਸਿੱਖਿਆ ਮੰਤਰਾਲਾ, ਭਾਰਤ ਸਰਕਾਰ · ਕੇਂਦਰੀ ਸ਼ਾਸਤਰੀ ਤਮਿਲ ਸੰਸਥਾਨ (CICT), ਚੇਨਈ
ਕਾਸ਼ੀ ਤਮਿਲ ਸੰਗਮਮ 5.0
ਕਾਸ਼ੀ ਤਮਿਲ ਸੰਗਮਮ 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
ਕੇਂਦਰੀ ਸ਼ਾਸਤਰੀ ਤਮਿਲ ਸੰਸਥਾਨ (CICT), ਚੇਨਈ · ਸਿੱਖਿਆ ਮੰਤਰਾਲਾ, ਭਾਰਤ ਸਰਕਾਰ
ਹੁਣੇ ਅਰਜ਼ੀ ਦਿਓ
ਇੰਟਰਫ਼ੇਸ ਦਾ ਇਹ ਅਨੁਵਾਦ ਅਜੇ ਖਰੜਾ ਹੈ ਅਤੇ CICT ਵੱਲੋਂ ਇਸ ਦੀ ਸਮੀਖਿਆ ਕੀਤੀ ਜਾ ਰਹੀ ਹੈ। English
ਅਨੁਵਾਦ

22 ਭਾਸ਼ਾਵਾਂ ਵਿੱਚ ਤਿਰੁੱਕੁਰਲ

ਸਾਰੇ 1,330 ਕੁਰਲ, ਅੱਠਵੀਂ ਅਨੁਸੂਚੀ ਦੀਆਂ ਭਾਸ਼ਾਵਾਂ ਵਿੱਚ CICT ਦੇ ਅਨੁਵਾਦਾਂ ਸਮੇਤ। ਅਧਿਆਇ ਅਤੇ ਭਾਸ਼ਾ ਚੁਣੋ।

← ਪਿਛਲਾਅਗਲਾ →
பொருட்பால் · Wealth › அமைச்சியல் · Ministers of State

68. வினை செயல்வகை · Modes of Action

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
பிறரோடு கலந்து ஆராய்வதற்கு எல்லை, இனி இது தப்பாது என்னும் துணிவினைப் பெறுதல்; அவ்வாறு துணிவுபெற்ற செயலானது பின் நீட்டிப்பால் காலதாமதம் ஆகுமானால் அது தீயதாகும்.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
நீட்டித்துச் செய்யலாகும் செயல்களைக் காலம் தாழ்த்திச் செய்யலாம்; நீட்டியாது செய்ய வேண்டியவற்றைக் காலம் தாழ்த்தாது செய்தல் வேண்டும்.
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
செயல் மேற்கொள்வான் அது இயலும் இடத்திலெல்லாம் செய்தல் நன்று; அது இயலாதபோது, செய்யமுடிந்த வழியறிந்து செய்தல் வேண்டும்.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
செயல், பகை ஆகிய இரண்டினது எச்சமும் ஆராய்ந்து பார்க்கும்போது, தீயின் எச்சம்போலப் பின் வளர்ந்து துன்புறுத்தும்.
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
ஒரு செயலை மேற்கொள்ளும்போது பொருள், கருவி, வினை, காலம், இடம் ஆகிய ஐந்தையும் மயக்கமின்றி, பிழையாமல் ஆராய்ந்து செய்தல் வேண்டும்.
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
வினை மேற்கொள்ளும்போது அது முடித்தற்கு வேண்டிய முயற்சியும், அதற்கு நேரும் இடையூறும், அது முடிந்தால் தான் அடையும் பயனும் ஆகிய யாவற்றையும் சீர்தூக்கிப்பார்த்துச் செய்தல் வேண்டும்.
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
செய்யப்படும் வினையைத் தொடங்குபவன் அதனைச் செய்யும் முறையாவது, அவ்வினையைத் தனக்குமுன் செய்தவனின் கருத்தையும் அவன் கையாண்ட வழியையும் அறிந்துகொள்ளுதலாகும்.
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
செய்கின்ற வினையால் அதையொத்த மற்றுமோர் வினையையும் ஒருவன் முடித்துக் கொள்ளுதல் வேண்டும். அது மதத்தால் நனைந்த கபோலத்தை உடைய யானையைக்கொண்டு மற்றுமோர் யானையைப் பிடிப்பதை ஒக்கும்.
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
தன் பகைவரோடு சேராதவரைத் தனக்கு நண்பர்களாக ஆக்கிக்கொள்ளுதலைத் தன் நண்பர்களுக்கு இனியனவற்றைச் செய்வதினும் விரைந்து செய்தல் வேண்டும்.
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
ஆளும் இடமாகிய நாடும் அரணும் சிறியவையாகப்பெற்ற அமைச்சர், தம்மினும் வலிமையுடையார் எதிர்த்தபோது, தம்மவர் நடுங்குதலை அஞ்சி, அந்நிலைக்கு வேண்டிய சந்து கூடுமாயின் அப்பெரியாரைப் பணிந்து அதனை ஏற்றுக்கொள்வர்.

ਅਧਿਆਇ

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

ਅਨੁਵਾਦ © ਕੇਂਦਰੀ ਸ਼ਾਸਤਰੀ ਤਮਿਲ ਸੰਸਥਾਨ, ਚੇਨਈ · CC BY 4.0 · ਤਿਰੁੱਕੁਰਲ ਬਹੁ-ਭਾਸ਼ਾਈ ਐਪ ਵਜੋਂ ਵੀ ਉਪਲਬਧ

ਪਹਿਲਕਦਮੀ Government of India Ministry of Education
ਲਾਗੂਕਰਤਾ Central Institute of Classical Tamil
ਸਹਿਯੋਗੀ Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti