अणकार
22 भासांनी तिरुक्कुरल
आठवे वळेरेंतल्या भासांनी CICT च्या अणकारांसयत सगळे 1,330 कुरल. अध्याय आनी भास निवडात.
பொருட்பால் · Wealth › அமைச்சியல் · Ministers of State
72. அவை அறிதல் · The Knowledge of the Council Chamber
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
தொகையறிந்த தூய்மை யவர்.
செஞ்சொல், இலக்கணச்சொல், குறிப்புச்சொல் என்னும் மூவகைச் சொற்களையும் அறிந்த தூய்மையினை உடையவர், ஒன்று சொல்லும்போது அப்பொழுதைய அவையினை அறிந்து ஆராய்ந்து சொல்ல வேண்டும்.
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.
நடைதெரிந்த நன்மை யவர்.
சொற்களின் நடையினை ஆராய்ந்தறிந்த நன்மையைப் பெற்றவர் அவையில் ஒன்று சொல்லும்போது அதன் விருப்பத்தை அறிந்து சொற்குற்றம், பொருட்குற்றம் இல்லாமல் மிகவும் தெளிவாகச் சொல்லுதல் வேண்டும்.
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.
வகையறியார் வல்லதூஉம் இல்.
அவையின் தன்மை அறியாது ஒன்று சொல்ல முற்படுவார், சொல்லின் வகையறியார்; கற்றறிந்த கலையும் அவர்க்கு இல்லை.
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.
வான்சுதை வண்ணம் கொளல்.
அறிவில் தம்மை ஒத்தவரையும் தம்மின் மிக்காரையும் கொண்ட அவையில் தம் நூலறிவும் சொல்வன்மையும் தோன்ற விரித்துக்கூறும் ஒள்ளியராதல் வேண்டும். வெண்மையுடையார் (அறிவீனர்) நிறைந்த அவையில் தாமும் அவரையொத்த, சுதையின் வெள்ளை நிறத்தைக் கொண்டவராக நடத்தல் வேண்டும்.
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.
முந்து கிளவாச் செறிவு.
தம்மினும் அறிவுடையார் அவையில் அவரை முந்திக் கொண்டு எதையும் சொல்லாத அடக்கம் ஒருவர்க்கு, இது நல்லதென்று சொல்லப்பட்ட குணங்கள் எல்லாவற்றிலும் நல்லதாகும்.
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
விரிந்த நூற்பொருள்களையெல்லாம் கற்றறிந்து அவற்றின் உண்மை உணர்ந்தார் அவையில், ஒருவன் சொல் இழுக்குப் படுதல் அறநெறியில் நின்ற ஒருவன் அந்நெறியிலிருந்து நீங்கி நிலை தளர்ந்து வீழ்தலை ஒத்தது.
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
குற்றமில்லாமல் சொற்களை ஆராயும் ஆற்றல் உடையார் உள்ள அவையில் சொன்னால், பல நூல்களைக் கற்று அவற்றின் பயனை அறிந்தவரது கல்வி எல்லாருக்கும் விளங்கித் தோன்றும்.
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
பிறரால் உணர்த்தப்படாமல் பொருள்களைத் தாமே உணரவல்ல அறிவுடையார் அவையில் ஒன்றைச் சொல்லுதல் தானே வளரும் பயிர் உள்ள பாத்தியில் நீர் ஊற்றினாற்போன்றது.
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.
நன்குசலச் சொல்லு வார்.
நல்லவர் இருக்கும் அவையில் நல்லவற்றை அவர் மனம்கொள்ளச் சொல்லவல்லவர், அறிவற்ற புல்லர் இருக்கும் அவையில் அவற்றை மறந்தும் சொல்லுதல் கூடாது.
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.
அல்லார்முன் கோட்டி கொளல்.
நல்லார் தம் இனத்தவர் அல்லாத பொல்லார் உள்ள அவையில் ஒன்றையும் சொல்லுதல் கூடாது; அவ்வாறு சொன்னால் அது தூயதல்லாத முற்றத்தில் கொட்டிய அமிழ்திற்கு ஒப்பாகும்.
अध्याय
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
अणकार © केंद्रीय अभिजात तमिळ संस्था, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल भोवभाशीक ॲप म्हूण लेगीत उपलब्ध



