Translations
Thirukkural in 22 languages
All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.
பொருட்பால் · Wealth › அங்கவியல் · Essentials of a State
75. அரண் · The Fortification
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
போற்று பவர்க்கும் பொருள்.
ஆற்றல்மிக்கவராய்ப் பகைவர்மேல் படையெடுத்துச் செல்வார்க்கும் அரண் சிறந்தது; ஆற்றலற்றுப் பகைவர்க்கு அஞ்சி அரணையே அடைபவர்க்கும் அது சிறந்தது.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
காடும் உடைய தரண்.
மணிபோலும் நிறத்தையுடைய நீரும், நிலமும், மலையும், நிழல்தரும் காடும் உள்ளதே நல்ல அரணாகும்.
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
உயரம், அகலம், குத்துப்படாத திண்மை, பொறிகளால் அணுக இயலாமை ஆகிய நான்கையும் மிகுதியாகவுடைய மதிலை அரண் என்று நூலோர் கூறுவர்.
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.
ஊக்கம் அழிப்ப தரண்.
காக்கவேண்டிய இடம் சிறியதாய், அகன்ற இடத்தைக் கொண்டதாய், தன்னை முற்றிய பகைவரது ஊக்கத்தைக் கெடுப்பதாய் அமைவதே அரணாகும்.
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.
நிலைக்கெளிதாம் நீரது அரண்.
பகைவரால் கொள்ளுதற்கு அரிதாகி, உள்ளே இருப்பார்க்கு வேண்டிய அளவு உணவு பெற்றதாய், அவர் போர்செய்தற்கு எளிதாயதன்மை உடையதாய் அமைவதே அரணாகும்.
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
நல்லாள் உடையது அரண்.
உள்ளிருப்பார்க்கு வேண்டிய பொருள்கள் எல்லாவற்றையும் உள்ளே உடையதாய், புறத்திருப்பார் அழிவு செய்யும் நிலை ஏற்படாமல் உதவும் நல்ல வீரரைத் தன்னகத்தே கொண்டதாய் விளங்குவதே அரணாகும்.
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.
பற்றற் கரியது அரண்.
நெருங்கிச் சூழ்ந்தும், அவ்வாறு சூழாது தாக்கியும், உள்ளிருப்பாரைக் கீழறுத்துத் திறப்பித்தும், புறத்தோரால் கைப்பற்றுதற்கு அரியதே அரணாகும்.
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
பற்றியார் வெல்வது அரண்.
படைப்பெருமையால் முற்றுகையிடுதலில் வல்லவராய் வந்து சூழ்ந்த பகைவரையும் தன்னைப் பற்றிய அகத்துள்ளோர் தாம் பற்றிய இடத்திலிருந்து நீங்காது நின்று வெல்ல உதவுவதே அரணாகும்.
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.
வீறெய்தி மாண்ட தரண்.
போர் தொடங்கியவுடன் பகைவர் அழியும்வண்ணம் அகத்தோர் செய்யும் மாறுபட்ட போர்களால் வீறுபெற்று, மேலும் தேவையான மாட்சியை உடையதே அரணாகும்.
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
இல்லார்கண் இல்லது அரண்.
அரணானது எல்லாவகையான நன்மைகளை உடையதாயினும், வினையாற்றும் திறனில்லாதவரிடம் அவை பயனற்றுப்போகும்.
Chapters
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App



