Translations
Thirukkural in 22 languages
All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.
Ask the Thirukkural study companion →
பொருட்பால் · Wealth › அங்கவியல் · Essentials of a State
77. படை மாட்சி · The Excellence of an Army
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை.
யானை, குதிரை, தேர், காலாள் ஆகிய நான்கு உறுப்புகளாலும் நிறைந்து, போரில் விளையும் துன்பங்களுக்கு அஞ்சாது நின்று, பகைவரை வெல்லும் படை அரசனுடைய செல்வங்கள் யாவற்றிலும் தலைசிறந்த செல்வமாகும்.
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்தொல்படைக் கல்லால் அரிது.
சிறிய படையாயிருப்பினும் அரசனுக்குப் போரில் துன்பம் நேரும்போது அதனை அஞ்சாது நின்று தாங்கும் வீரம், அவனது முன்னோரைத் தொடங்கிவரும் படைக்கல்லது வேறுபடைகளுக்கு இருக்காது.
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும்.
எலிகளாகிய பகை ஒன்றுதிரண்டு கடல்போல ஒலியெழுப்பினால் நாகத்திற்கு என்ன துன்பம் வரும்? அந்நாகம் உயிர்ப்பின் எலிப்பகை தானே அழியும்.
அழிவின்று அறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை.
போரில் அழியாமல், பகைவரால் கீழறுக்கப்படாமல், தொன்று தொட்டு வந்த வீரத்தை உடையதே அரசுக்குத்தக்க படையாகும்.
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை.
கூற்றுவன் தானே சினந்து பகைப்படையாய் வந்தாலும் பலரும் நெஞ்சொத்து எதிர்நிற்கும் மனவல்லமை உடையதே சிறந்த படையாகும்.
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு.
வீரம், மானம், முன் வீரர் சென்ற நன்னெறியில் செல்லுதல், அரசனால் தேறப்படுதல் ஆகிய நான்கு குணங்களுமே ஒரு படைக்குப் பாதுகாப்பாகும்.
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து.
பகைவரால் வகுக்கப்பட்டுத் தன்னை எதிர்த்துவந்த படையின் போரை விலக்கும் வகையறிந்து விலக்கி, அவரது தூசிப்படையைத் தனக்கு எதிரே வராமல் தடுத்துத் தான் அதனை எதிர்கொள்வதே சிறந்த படையாகும்.
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானைபடைத்தகையால் பாடு பெறும்.
பகைவரை எதிர்த்துச்சென்று, போரிடும் வல்லமையும் அவர் போரிட வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும், ஒரு படை தன் தோற்றப் பொலிவால் பெருமை அடையும்.
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை.
தேய்ந்து தேய்ந்து சிறிதாதலும், மனத்திலிருந்து நீங்காத வெறுப்பும், வறுமையும் இல்லையானால் படை பகைவரை எளிதில் வெல்லும்.
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானைதலைமக்கள் இல்வழி இல்.
போரில் நிலையுடைய வீரரை மிக உடையதாயினும், தனக்குத் தலைவராகும் வீரர் இல்லாதபோது படையானது நிலைத்துநிற்காது.
Chapters
1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App





