Translations
Thirukkural in 22 languages
All 1,330 couplets with CICT's translations into the languages of the Eighth Schedule. Choose a chapter and a language.
பொருட்பால் · Wealth › அங்கவியல் · Essentials of a State
82. தீ நட்பு · Evil Friendship
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
பெருகலிற் குன்றல் இனிது.
அன்பு மிகுதியால் பருகுவார்போன்றாராயினும் தீக்குணம் உடையாரது நட்பு வளர்தலைக் காட்டிலும் தேய்தல் நல்லது.
உறின்நட்டு அறினொருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்?
பெறினும் இழப்பினும் என்?
தமக்குப் பயனுள்ளபோது நண்பராயிருந்து, பயனில்லாதபோது விலகும் பொருத்தமற்றவரது நட்பைப்பெற்றால் கிடைக்கும் நன்மை யாது? இழந்தால் வரும் கேடு யாது?
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
கொள்வாரும் கள்வரும் நேர்.
நட்பின் அளவைப் பார்க்காமல் அதனால் ஆகும் பயனின் அளவையே பார்க்கும் நண்பரும், விலையைக்கொள்ளும் பொதுமகளிரும், பிறர்க்கு விளையும் துன்பத்தைக் கருதாது அவர் சோர்வைக் கருதும் கள்வரும் தம்முள் ஒப்பாவார்.
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
தமரின் தனிமை தலை.
போர் வராதபோதெல்லாம் தாங்குவதுபோன்றிருந்து, போர் வரும்போது போர்க்களத்தில் தள்ளி நீங்கிப்போகும் கல்வியில்லாத புரவியைப் போல்வாரது நட்பைக்காட்டிலும் தனிமை சிறப்புடையது.
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
எய்தலின் எய்தாமை நன்று.
துன்பம் வரும்போது துணையாகாது விலகிச்செல்லும் கீழ் மக்களது தீநட்பு ஒருவர்க்குக் கிடைத்தலினும் கிடைக்காதுபோதல் நன்று.
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
ஏதின்மை கோடி உறும்.
அறிவற்றவனது நெருங்கிய நட்பைக்காட்டிலும் அறிவுடையவனது பகைமை கோடி மடங்கு நல்லதாம்.
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
பத்தடுத்த கோடி உறும்.
பலவகையால் மகிழ்வித்துத் தாம் பயன்கொண்டு செல்வாரின் நட்பால் வருவனவற்றைக் காட்டிலும் பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நல்லவையாகும்.
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
சொல்லாடார் சோர விடல்.
தம்மால் முடியும் செயலைச் செய்யவிடாது வீண்பொழுது போக்குவாரிடம் கொண்ட நட்பை, அவர் அறியுமாறு சொல்லாமல் மெதுவாகக் காலந்தாழ்த்தி விடுதல் வேண்டும்.
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
சொல்வேறு பட்டார் தொடர்பு.
செயலும் சொல்லும் ஒன்றுக்கொன்று ஒவ்வாது வேறுவேறாய் இருப்பவரது நட்பு, நனவில் மட்டுமல்லாமல் கனவிலும் இன்னாததாகும்.
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
மன்றில் பழிப்பார் தொடர்பு.
தனியே மனையில் இருக்கும்போது நட்புப்பாராட்டிப் பலரோடு அவையில் இருக்கும்போது பழிகூறுவார் நட்பு, சிறிதளவும் தம்மை நெருங்காது பாதுகாத்துக்கொள்ளல் வேண்டும்.
Chapters
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
Translations © Central Institute of Classical Tamil, Chennai · CC BY 4.0 · Also available as the Thirukkural Multilingual App



