মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার · সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই
কাশী তামিল সঙ্গমম 5.0
কাশী তামিল সঙ্গমম 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই · মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার
ইন্টরফেসকী হন্দোকপা অসি দ্রাফ্ট অমনি অমসুং CICT না য়েংশিল্লি। English
হনবা
হন্দোকপশিং

লোল 22 দা তিরুক্কুরল

কুরল 1,330 পূম্নমক, 8শুবা সিদিউলগী লোলশিংদা CICT না হন্দোকপগা লোয়ননা। তাংকক অমা অমসুং লোল অমা খনবিয়ু।

তিরুক্কুরল তম্নবগী মরূপতা হংবিয়ু →

← মমাঙগীমথংগী →
பொருட்பால் · Wealth › அங்கவியல் · Essentials of a State

95. மருந்து · Medicine

তামিল অসি কম্প্যুটরগী খোনজেলনা পাবনি।
941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்று.
உணவும் செயல்களும் ஒருவனது உடலுக்கேற்ற அளவின ஆகாமல் மிகுமாயினும் குறையுமாயினும், வாதம்முதலாக எண்ணப்பட்ட மூன்று நோய்களும் அவனைத் துன்புறுத்தும்.
942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியதுஅற்றது போற்றி உணின்.
ஒருவன் முன் உண்டது அற்றதைத் தெளிவாக அறிந்து, பின் உண்பானாயின் அவனது உடலுக்கு வேறு மருந்து வேண்டாவாம்.
943
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
முன் உண்டது அற்றால் பின் உண்பதை ஒருவன் அளவறிந்து உண்ண வேண்டும். அது பெறற்கரிய மானுட உடலைப் பெற்றவன் அதனை நெடுங்காலம் நிலைபெற்றிருக்கச் செய்யும் வழியாகும்.
944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்து.
முன் உண்டது அற்றதை அறிந்து, பின் மிகப்பசித்து, உண்ணும்போது மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு, மனம்போன வழியெல்லாம் செல்லாமல் உண்ணல் வேண்டும்.
945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
உடலுக்கும், காலத்திற்கும், சுவைக்கும் ஏற்ற உணவை விருப்பம்போல் அல்லாமல் நோய்வராத அளவு ஒருவன் உண்பானாயின் அவனது உயிர்க்குப் பிணிகளால் துன்பம் நேராது.
946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய்.
உண்ணக்கூடிய அளவில் சிறிது குறைய உண்டலை நன்றென்று அறிந்து அவ்வாறே உண்பவனிடம் இன்பம் நீங்காது நிலைத்து நிற்கும்; அளவுகடந்த உணவை விழுங்குவானிடம் நோய் நீங்காது நிலைத்து நிற்கும்.
947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்நோயள வின்றிப் படும்.
தன் உடலுக்கேற்ற உணவும் காலமும் ஆராயாது வயிற்றுத் தீயளவின்றி ஒருவன் அளவு கடந்து உண்பானாயின் அவனிடம் நோய்கள் அளவின்றி வளரும்.
948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்.
மருத்துவன் என்பான் நோயாளனின் நோயை அதன் குறிகளால் அது இன்னதென்று அறிந்து, நோய் வந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து தெளிந்து, அதுதீர்க்கும் வழியை அறிந்து, அதனைச் செய்யும் வழியில் தவறின்றிச் செய்தல் வேண்டும்.
949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்கற்றான் கருதிச் செயல்.
மருத்துவம் கற்றவன் நோயாளியின் அளவினையும், அவனது நோயின் அளவினையும், தன் செயலுக்கேற்ற காலத்தினையும் மருத்துவநூல் நெறியால் நோக்கி அவற்றோடு பொருந்தச் செய்தல் வேண்டும்.
950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றுஅப்பால்நாற் கூற்றே மருந்து.
நோய்க்கு மருந்தாவது நோயாளன், மருத்துவன், மருந்து, அதனைப் பிழையாமல் இயற்றுவான் (நோயாளியைக்கண்காணிப்பவன்) என்று சொல்லப்பட்ட நான்கு பகுதிகளையுடைய நான்கு திறத்தது.

তাংককশিং

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

হন্দোকপশিং © সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0 · তিরুক্কুরল মল্টিলিঙ্গুয়েল এপ ওইনসু ফংই

খোঙথাং লৌখৎলিবা Government of India মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার
পাঙথোক্লিবা সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই
খূৎ শম্নরিবা ইন্দিয়ান ইনষ্টিট্যুট ওফ টেক্নোলোজী মদ্রাসkashitamil.iitm.ac.in  বনারস হিন্দু য়ুনিভর্সিটি, বারানসীkashitamil.bhu.edu.in  ভারতীয় ভাষা সমিতি