মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার · সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই
কাশী তামিল সঙ্গমম 5.0
কাশী তামিল সঙ্গমম 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই · মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার
ইন্টরফেসকী হন্দোকপা অসি দ্রাফ্ট অমনি অমসুং CICT না য়েংশিল্লি। English
হনবা
হন্দোকপশিং

লোল 22 দা তিরুক্কুরল

কুরল 1,330 পূম্নমক, 8শুবা সিদিউলগী লোলশিংদা CICT না হন্দোকপগা লোয়ননা। তাংকক অমা অমসুং লোল অমা খনবিয়ু।

তিরুক্কুরল তম্নবগী মরূপতা হংবিয়ু →

← মমাঙগীমথংগী →
பொருட்பால் · Wealth › ஒழிபியல் · Miscellaneous

98. பெருமை · Greatness

তামিল অসি কম্প্যুটরগী খোনজেলনা পাবনি।
971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்குஅஃதிறந்து வாழ்தும் எனல்.
ஒருவனுக்கு ஒளியாவது ‘செயற்கரிய செயல்களைச் செய்வோம்’ என்னும் ஊக்கம். ஒருவனுக்கு இழிவானது அவற்றைத் தவிர்த்தாயினும் உயிர்வாழ்வோமென்று கருதலாகும்.
972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்.
எல்லா உயிர்களும் பிறப்பால் ஒத்தவை; அவை செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் சிறப்பு ஒவ்வாததாகும்.
973
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்கீழல்லார் கீழல் லவர்.
செயற்கரிய செயல்களைச் செய்யாத சிறியவர் எவ்வளவு மேல்நிலையிலிருந்தாலும் பெரியவராகமாட்டார்; செயற்கரிய செய்த பெரியவர் எவ்வளவு தாழ்ந்த நிலையிலிருந்தாலும் சிறியவராகக் கருதப்படமாட்டார்.
974
ஒருமை மகளிரே போலப் பெருமையும்தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
திண்ணிய மனத்தினை உடைய மகளிர் கற்பில் வழுவாமல் தம்மைக் காத்துக்கொண்டு ஒழுகுதல்போன்று, நல்லறத்தினின்று வழுவாமல் ஒருவன் தன்னைக் காத்துக்கொண்டு ஒழுகுவானாயின் அவனிடம் பெருமை உண்டாம்.
975
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல்.
பெருமை உடையவர், தாம் வறியவரானபோதும் பிறரால் செய்தற்கரிய செயல்களைச் செய்யவேண்டிய நெறியில் செய்தலில் வல்லவராவர்.
976
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.
பெரியவரை வழிபட்டு அவர் இயல்பினை நாமும் கொள்வோம் என்னும் கருத்து, சிறியவர் உள்ளத்தில் உண்டாவதில்லை.
977
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்சீரல் லவர்கண் படின்.
பெரியவரிடத்துள்ள சிறப்பு, சிறியவரிடத்துப்படுமாயின், அளவற்ற தருக்கினைச் செய்யும். பெரியவரிடத்துள்ள சிறப்பு குடிப்பிறப்பு, செல்வம், கல்வி ஆகியவற்றின் மிகுதி.
978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமைஅணியுமாம் தன்னை வியந்து.
பெருமை உடையார் அச்சிறப்பைப் பெற்றிருந்தாலும் செருக்கில்லாமல் பணிந்து நடப்பர்; சிறுமை உடையார் அச்சிறப்பு இல்லாதபோதும் தம்மை வியந்து, தமக்கில்லாத தகுதியை இருப்பதாகப் புனைந்துரைப்பர்.
979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமைபெருமிதம் ஊர்ந்து விடல்.
பெருமைக் குணமாவது தகுதியிருக்கும்போதும் செருக்கின்றி இருத்தலாகும்; சிறுமைக் குணமாவது தகுதியில்லாதபோதும் அளவற்ற செருக்குடன் செயல்படுதலாகும்.
980
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்குற்றமே கூறி விடும்.
பெருமை உடையார், பிறர் நிறைகளையே கூறிக் குறைகளை மறைத்துவிடுவர்; சிறுமை உடையார், பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறுவர்.

তাংককশিং

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

হন্দোকপশিং © সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0 · তিরুক্কুরল মল্টিলিঙ্গুয়েল এপ ওইনসু ফংই

খোঙথাং লৌখৎলিবা Government of India মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার
পাঙথোক্লিবা সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই
খূৎ শম্নরিবা ইন্দিয়ান ইনষ্টিট্যুট ওফ টেক্নোলোজী মদ্রাসkashitamil.iitm.ac.in  বনারস হিন্দু য়ুনিভর্সিটি, বারানসীkashitamil.bhu.edu.in  ভারতীয় ভাষা সমিতি