ਸਿੱਖਿਆ ਮੰਤਰਾਲਾ, ਭਾਰਤ ਸਰਕਾਰ · ਕੇਂਦਰੀ ਸ਼ਾਸਤਰੀ ਤਮਿਲ ਸੰਸਥਾਨ (CICT), ਚੇਨਈ
ਕਾਸ਼ੀ ਤਮਿਲ ਸੰਗਮਮ 5.0
ਕਾਸ਼ੀ ਤਮਿਲ ਸੰਗਮਮ 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
ਕੇਂਦਰੀ ਸ਼ਾਸਤਰੀ ਤਮਿਲ ਸੰਸਥਾਨ (CICT), ਚੇਨਈ · ਸਿੱਖਿਆ ਮੰਤਰਾਲਾ, ਭਾਰਤ ਸਰਕਾਰ
ਹੁਣੇ ਅਰਜ਼ੀ ਦਿਓ
ਇੰਟਰਫ਼ੇਸ ਦਾ ਇਹ ਅਨੁਵਾਦ ਅਜੇ ਖਰੜਾ ਹੈ ਅਤੇ CICT ਵੱਲੋਂ ਇਸ ਦੀ ਸਮੀਖਿਆ ਕੀਤੀ ਜਾ ਰਹੀ ਹੈ। English
ਅਨੁਵਾਦ

22 ਭਾਸ਼ਾਵਾਂ ਵਿੱਚ ਤਿਰੁੱਕੁਰਲ

ਸਾਰੇ 1,330 ਕੁਰਲ, ਅੱਠਵੀਂ ਅਨੁਸੂਚੀ ਦੀਆਂ ਭਾਸ਼ਾਵਾਂ ਵਿੱਚ CICT ਦੇ ਅਨੁਵਾਦਾਂ ਸਮੇਤ। ਅਧਿਆਇ ਅਤੇ ਭਾਸ਼ਾ ਚੁਣੋ।

← ਪਿਛਲਾਅਗਲਾ →
காமத்துப்பால் · Love › கற்பியல் · The Post-marital love

125. நெஞ்சொடு கிளத்தல் · Soliloquy

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
நெஞ்சே! ஒன்றாலும் தீராத இந்நோயினைத் தீர்க்கும் மருந்தொன்றை எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல்.
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.
என் நெஞ்சே, வாழ்வாயாக! அவர் என்னிடம் காதல் இலராகவும், நீ அவர் வரவை எதிர்பார்த்து வருந்துவதற்குக் காரணம் உன் அறியாமையே; வேறில்லை.
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
நெஞ்சே, அவரிடம் செல்லாது, இங்கு இறப்பதையும் செய்யாது, அவர் வரவை எண்ணி நீ வருந்துவது ஏன்? இக்கொடிய நோயைச் செய்தவர் நம்மிடம் இரக்கம்கொண்டுவருதல் நிகழாது.
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.
நெஞ்சே, நீ அவரிடம் சென்றால் இக்கண்களையும் உடன்கொண்டு செல்க. நீ மட்டும் செல்வாயானால், இக்கண்கள் அவரைப் பார்த்தலை விரும்பி நீ காட்டென்று என்னைத் தின்பனபோன்று நலியும்.
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
நெஞ்சே, நாம் அவரிடம் அன்புடையராயிருந்தும், நம்மிடம் அன்புகொள்ளாத காதலர், நம்மை வெறுத்தார் என்றெண்ணிப் புலந்து கைவிட்டிருக்கும் வலிமை நமக்கு உண்டா?
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
என் நெஞ்சே, நான் அவரொடு புலந்தால் அப்புலவியைக் கலவியால் நீக்கவல்ல காதலரைக் கண்டால் ஒருகால் புலந்து பின் அதனை நீங்கமாட்டாய். அதனைச் செய்ய இயலாத நீ இப்போது அவர் கொடியவரென வெறுப்பைக் காட்டுகின்றாய். இதைத் தவிர்த்து அவரிடம் செல்லத் துணிவாயாக.
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.
நல்ல நெஞ்சே, ஒன்று காமவேட்கையை விடு; அல்லது நாணத்தை விடு. இரண்டையும் விடாமை உன் எண்ணமானால், அவற்றைத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
என் நெஞ்சே, எனது ஆற்றாமையை அறியாததால் நொந்து வந்து இன்பம் தராதிருக்கிறார் என்று எண்ணி, அதைத் தெரிவிக்கவேண்டி நம்மைப் பிரிந்துசென்றவரிடம் ஏக்கத்தோடு செல்லும் நீ ஏதும் அறியாத பேதையாகும்.
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
என் நெஞ்சே, காதலர் உன் அகத்தவராக, அதனை அறியாது புறத்தே நீ யாரைத் தேடிச்செல்கின்றாய்? அதனை விட்டுவிடு.
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
நம்மைக் கூடாமல் நீங்கிச்சென்ற காதலரை நாம் நம் அகத்துள் கொண்டுள்ளோம். முன்னே புறத்தழகை இழந்ததுபோன்று அகத்தழகையும் இப்போது இழப்போம்.

ਅਧਿਆਇ

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

ਅਨੁਵਾਦ © ਕੇਂਦਰੀ ਸ਼ਾਸਤਰੀ ਤਮਿਲ ਸੰਸਥਾਨ, ਚੇਨਈ · CC BY 4.0 · ਤਿਰੁੱਕੁਰਲ ਬਹੁ-ਭਾਸ਼ਾਈ ਐਪ ਵਜੋਂ ਵੀ ਉਪਲਬਧ

ਪਹਿਲਕਦਮੀ Government of India Ministry of Education
ਲਾਗੂਕਰਤਾ Central Institute of Classical Tamil
ਸਹਿਯੋਗੀ Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti