शिक्षण मंत्रालय, भारत सरकार · केंद्रीय अभिजात तमिळ संस्था (CICT), चेन्नई
काशी तमिळ संगमम 5.0
काशी तमिळ संगमम 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
केंद्रीय अभिजात तमिळ संस्था (CICT), चेन्नई · शिक्षण मंत्रालय, भारत सरकार
आतांच अर्ज करात
इंटरफेसाचो हो अणकार मसुदो आसा आनी CICT कडल्यान ताची तपासणी चालू आसा. English
अणकार

22 भासांनी तिरुक्कुरल

आठवे वळेरेंतल्या भासांनी CICT च्या अणकारांसयत सगळे 1,330 कुरल. अध्याय आनी भास निवडात.

← आदलेंफुडलें →
காமத்துப்பால் · Love › கற்பியல் · The Post-marital love

131. புலவி · Pouting

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
நீ அவரை விரைந்து சென்று தழுவாது, இச்செயலை மேற்கொண்டு புலப்பாயாக; அவ்வாறு புலந்தால் காதலர் அடையும் துன்பத்தை நாம் சிறிது காண்போம்.
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
புலவியானது கலவி இன்பம்செய்தற்குத் தேவையான அளவினை உடையதாதல், உப்பானது உண்ணுபவையை இன்சுவையுடையவாய் ஆக்குதற்குத் தேவையான அளவு உடையதாதல் போன்றது.
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
தம்மைப் புலந்தாரைப் புலவி நீக்கிக் கூடாது செல்லுதல், முன்பே துன்பமுற்று அழிந்தார்க்கு மேலும் மேலும் துன்பத்தைச் செய்தாற்போன்றது.
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
தம்மோடு ஊடியவரை ஊடல்நீக்கிக் கூடாதிருத்தல் முன் நீர் பெறாமல் வாடிய கொடியை அடியில் அறுத்தாற்போலும்.
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.
நற்பண்புகளால் தகுதியுடையவராய் இருக்கும் ஆடவர்க்கு அழகாவது பூவையொத்த கண்களை உடைய மகளிரது நெஞ்சில் நிகழும் புலவி மிகுதியாகும்.
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
முதிர்ந்த கலாமாகிய துனியும் இளைய கலாமாகிய புலவியும் இல்லையானால் காமம் முதிர்ந்த பழமும் இளம்காயும்போன்றது.
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்று கொல் என்று.
புணர்ச்சி இனி வருமோ, வராதோ என்று கருதலால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.
இவர் நம்மால் துன்புற்றார் என்று அத்துன்பத்தை அறியும் காதல் உடையாரைப் பெறாதபோது ஒருவர் நோதலால் என்ன பயன்?
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
உயிருக்குத் தேவையான நீரும் நிழலில் இருப்பின் இனிதாகும்; வெயிலில் இருப்பின் இனிதாகாது. கலவிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையாரிடம் இனிதாகும்; அன்பிலாரிடம் இனிதாகாது.
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
தான் ஊடலில் மெலியவும், பிரிந்திருக்கவல்லவரோடு கூடுவோம் என்று என் நெஞ்சம் முயலுதற்குக் காரணம் அதன் அவாவேதவிர வேறில்லை.

अध्याय

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

अणकार © केंद्रीय अभिजात तमिळ संस्था, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल भोवभाशीक ॲप म्हूण लेगीत उपलब्ध

उपक्रम Government of India Ministry of Education
अंमलबजावणी Central Institute of Classical Tamil
सहकार्य Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti