വിദ്യാഭ്യാസ മന്ത്രാലയം, ഭാരത സർക്കാർ · സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ് (CICT), ചെന്നൈ
കാശി തമിഴ് സംഗമം 5.0
കാശി തമിഴ് സംഗമം 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ് (CICT), ചെന്നൈ · വിദ്യാഭ്യാസ മന്ത്രാലയം, ഭാരത സർക്കാർ
ഇപ്പോൾ അപേക്ഷിക്കുക
ഇന്റർഫേസിന്റെ ഈ പരിഭാഷ ഒരു കരട് രൂപമാണ്; CICT ഇത് പരിശോധിച്ചുവരികയാണ്. English
പരിഭാഷകൾ

22 ഭാഷകളിൽ തിരുക്കുറൾ

എട്ടാം പട്ടികയിലെ ഭാഷകളിലേക്കുള്ള CICT-യുടെ പരിഭാഷകളോടൊപ്പം 1,330 കുറളുകളും. ഒരു അധ്യായവും ഒരു ഭാഷയും തിരഞ്ഞെടുക്കുക.

← മുമ്പത്തേത്അടുത്തത് →
அறத்துப்பால் · Virtue › துறவறவியல் · Ascetic Virtue

32. இன்னா செய்யாமை · Not doing Evil

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
பெருமையைத்தரும் செல்வங்களைப் பெறலாமாயினும் பிறர்க்குத் தீமை விளைவிக்காதிருத்தல் தூயமனம்கொண்டாரது துணிவாகும்.
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
தம்மேல் பகைமைகொண்டு ஒருவன் தீமைசெய்வானாயினும், மீண்டும் அவனுக்குத் தீமை செய்யாமை தூயமனம்கொண்டாரது துணிவாகும்.
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
தான் முன்பு எத்தீமையும் செய்யாதிருக்கவும் தன்மேல் பகைமைகொண்டவர்க்கும் தீமையை ஒருவன் செய்வானேயானால் அச்செயல் அவனுக்குக் கடக்கமுடியாத துன்பத்தைக் கொடுக்கும்.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
தமக்குத் தீங்கு இழைத்தவரைத் தண்டித்தலாவது, அவர்களே வெட்கம் அடையுமாறு அவர்களுக்கு இனியவற்றைச்செய்து, அவர் செய்ததையும் தாம் செய்ததையும் மறந்து விடுதலாகும்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் உயிர்க்கு வந்தனபோலக் கருதி, அவற்றைக் காப்பாற்றாதவர்களின் அறிவினால் அடையும் பயன் ஏதும் உண்டா?
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
இவை உயிர்களுக்குத் தீங்குசெய்யும் என்று தான் உணர்ந்தவற்றை ஒருவன் பிறருக்குச் செய்தலை விரும்புதல் கூடாது.
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
மனமறிந்த இன்னாத செயல்களை எக்காலத்தும், எவர்க்கும், எவ்வளவு சிறிதும் செய்யாதிருத்தல் தலையாய அறமாகும்.
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
பிறர்செய்யும் தீமைகள் தன் உயிர்க்குக் கேடு விளைவிக்கும் என்பதைத் தன் வாழ்க்கையில் உணர்ந்தவன், பிறவுயிர்களுக்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தால்?
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
பிறர்க்குத் துன்பம் தருவனவற்றை ஒரு பகலின் முற்பகுதியில் ஒருவன் செய்வானானால் அப்பகலின் பிற்பகுதியில் அவனுக்கு அவர்கள் செய்யாமல் துன்பங்கள் தாமே வரும்.
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
பிறர்க்குச்செய்த தீமையெல்லாம் தீமைசெய்தாரையே அடையும்; ஆதலால், தமக்குத் தீமையை விரும்பாதவர் பிறர்க்கு அதனைச் செய்யமாட்டார்.

അധ്യായങ്ങൾ

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

പരിഭാഷകൾ © സെൻട്രൽ ഇൻസ്റ്റിറ്റ്യൂട്ട് ഓഫ് ക്ലാസിക്കൽ തമിഴ്, ചെന്നൈ · CC BY 4.0 · തിരുക്കുറൾ ബഹുഭാഷാ ആപ്പായും ലഭ്യമാണ്

സംരംഭം Government of India Ministry of Education
നിർവഹണം Central Institute of Classical Tamil
സഹകരണം Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti