মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার · সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই
কাশী তামিল সঙ্গমম 5.0
কাশী তামিল সঙ্গমম 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें
সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল (CICT), চেন্নাই · মিনিষ্ট্রি ওফ এজুকেসন, ভারত সরকার
হৌজিক এপ্লাই তৌবিয়ু
ইন্টরফেসকী হন্দোকপা অসি দ্রাফ্ট অমনি অমসুং CICT না য়েংশিল্লি। English
হন্দোকপশিং

লোল 22 দা তিরুক্কুরল

কুরল 1,330 পূম্নমক, 8শুবা সিদিউলগী লোলশিংদা CICT না হন্দোকপগা লোয়ননা। তাংকক অমা অমসুং লোল অমা খনবিয়ু।

← মমাঙগীমথংগী →
பொருட்பால் · Wealth › அரசியல் · Royalty

55. செங்கோன்மை · The Right Sceptre

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
பிறர் குற்றம் செய்தால் அக்குற்றத்தைத் தெரிந்து, யாரிடமும் கண்ணோட்டமின்றி, நடுவு நிலைமையில் நின்று, அக்குற்றத்திற்குச் சொல்லப்பட்டுள்ள தண்டனையை ஆராய்ந்து செயல்படுவதே முறையாகும்.
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி.
உலகத்து உயிர்களெல்லாம் உணவுதரும் மழையை எதிர்நோக்கி வாழும்; குடிகளெல்லாம் அரசனது செங்கோலை எதிர்நோக்கி வாழும்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
அரசனால் செலுத்தப்படும் செங்கோல், அந்தணர் நூலுக்கும் அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்று நிற்பது.
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
தன் குடிகளைத் தழுவிக்கொண்டு, செங்கோலைச் செலுத்தும் பெருநில வேந்தனுடைய அடிகளைத் தழுவிக்கொண்டு, அவனிடம் நீங்காத அன்புடன் இருப்பர் உலகத்தார்.
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
அறநூல்கள் சொல்லியுள்ள முறையில் செங்கோல் செலுத்தும் அரசனின் நாட்டில் பருவமழையும் குறையாத விளைச்சலும் ஒருங்குசேர்ந்து காணப்படும்.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
அரசனுக்குப் போரில் வெற்றியைக் கொடுப்பது வேல் அன்று, அவனது கோலே. அக்கோலும் அதனைச் செய்தற்குச் செவ்விதாய் வளையாமல் இருத்தல் வேண்டும்.
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
உலகத்தையெல்லாம் அரசன் காப்பான்; அவனை அவனது செங்கோலே காக்கும். அச்செங்கோலை, அவன் முறையாக, அறம் வழுவாது செலுத்த வேண்டும்.
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
எளிய இயல்பினை உடையவனாய், நூலோர் பலரோடும் ஆராய்ந்து முறைசெய்யாத அரசன் தாழ்ந்த நிலையினனாய், பாவமும் பழியும் அடைந்து தானே கெடுவான்.
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
குடிகளைப் பிறர் துன்புறுத்தாமல் காத்துத் தானும் அவரைப் பேணி, அவர் குற்றம்செய்தால் தண்டித்தல் அரசனுக்குப் பழியன்று; அது அவனது கடமையாகும்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
அரசன் கொடியவர்களுக்குக் கொலைத்தண்டனை விதித்தல் உழவன் களையை நீக்கி வயலில் நல்ல பயிரைக் காப்பதோடு ஒப்பாகும்.

তাংককশিং

1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை

হন্দোকপশিং © সেন্ত্রেল ইনষ্টিট্যুট ওফ ক্লাসিকেল তামিল, চেন্নাই · CC BY 4.0 · তিরুক্কুরল মল্টিলিঙ্গুয়েল এপ ওইনসু ফংই

খোঙথাং লৌখৎলিবা Government of India Ministry of Education
পাঙথোক্লিবা Central Institute of Classical Tamil
খূৎ শম্নরিবা Indian Institute of Technology Madras Banaras Hindu University Bharatiya Bhasha Samiti