अणकार
22 भासांनी तिरुक्कुरल
आठवे वळेरेंतल्या भासांनी CICT च्या अणकारांसयत सगळे 1,330 कुरल. अध्याय आनी भास निवडात.
பொருட்பால் · Wealth › அங்கவியல் · Essentials of a State
79. நட்பு · Friendship
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
வினைக்கரிய யாவுள காப்பு.
நட்பைப்போன்று செய்துகொள்ளுதற்கு அரிய செயல்கள் யாவை? அந்நட்பைப்போன்று பகைவர் செய்யும் இடையூறுகளுக்கு அடைதற்கரிய காப்பானவை யாவை?
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
பின்னீர பேதையார் நட்பு.
அறிவுடையவர் நட்பு, பிறைநிறைவுறும் தன்மையில் நாள்தோறும் மிகும் தன்மையதாம். பேதையார் நட்பு, நிறைமதியானது நாள்தோறும் குறையும் தன்மைபோல் குன்றும் தன்மையதாம். இதற்குக் காரணம் முன்னால் ஒருவரையொருவர் அறியாதிருந்து, பின்னால் நன்கு அறிதலாகும்.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
பண்புடை யாளர் தொடர்பு.
நற்பண்புடையார் தம்முள் கொள்ளும் நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பம் தருதல், நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பம் செய்தலுக்கு ஒப்பாகும்.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
ஒருவரோடு ஒருவர் நட்புக்கொள்ளுதல் என்பது தம்முள் நகைப்புக்கு உரியனவற்றைப் பேசி, நகையாடல் பொருட்டாகாது; நண்பர் பழிதரும் செயலைச் செய்யும்போது அவரை இடித்துரைத்துத் திருத்துதல்பொருட்டாகும்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
நட்பாங் கிழமை தரும்.
ஒருவரோடு ஒருவர் நண்பராய் இருத்தற்கு ஓர் ஊரினராய் இருத்தலும் பலமுறை கண்டும் பேசியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை. இருவருக்கும் உணர்ச்சி ஒத்திருத்தலே நட்பாகும் உரிமையைக் கொடுக்கும்.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
அகநக நட்பது நட்பு.
ஒருவரையொருவர் பார்க்கும்போது முகம் மட்டுமே மலரும் வகையில் நட்புச்செய்வது நட்பாகாது; அன்பால் மனமும் மலர நட்புச்செய்வதே உண்மை நட்பாகும்.
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
அல்லல் உழப்பதாம் நட்பு.
கேட்டினைத்தரும் தீய நெறிகளில் செல்லும்போது அவற்றிலிருந்து விலக்கி, நன்னெறிகளில் செல்லாதபோது அவற்றில் செலுத்தி, அழிவு வரும்போது அதனை நீக்க முடியாவிட்டால் அத்துன்பத்தைத் தானும் பகிர்ந்து கொள்வதே நட்பாகும்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
இடுக்கண் களைவதாம் நட்பு.
அவையில் ஆடைகுலைந்தவனுக்கு அவன்கை உடன்சென்று உதவி இழிவைப் போக்குவது போன்று, நண்பனுக்குத் துன்பம் வரும்போது அப்போதே சென்று உதவி அத்துன்பத்தைப் போக்குவதே நட்பாகும்.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
நட்பினுக்குப் பெருமைக்குரிய அரசிருக்கை எதுவென்றால் அது எப்போதும் வேறுபடாது, முடிந்தபோதெல்லாம் அறம், பொருள்களிலெல்லாம் தளராது தாங்கும் உறுதியாகும். அதுவே நட்பிற்கு உச்ச எல்லையாகும்.
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
புனையினும் புல்லென்னும் நட்பு.
இவர் நம்மிடம் இவ்வளவு அன்புடையவர், நாம் இவரிடம் இவ்வளவு அன்புகொண்டவர் என்றெல்லாம் ஒருவரையொருவர் புனைந்து சொன்னாலும், அந்த நட்பானது சிறப்பற்றதாகும்.
अध्याय
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
अणकार © केंद्रीय अभिजात तमिळ संस्था, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल भोवभाशीक ॲप म्हूण लेगीत उपलब्ध



