শিক্ষা মন্ত্রক, ভারত সরকার · সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল (CICT), চেন্নাই
কাশী তামিল সঙ্গমম 5.0
কাশী তামিল সঙ্গমম 5.0
திருக்குறள் பயில்வோம் · Thirukkural Payilvom – Thirukkural Abhyas Karen · तिरुक्कुरल अभ्यास करें · Let's Learn Thirukkural
সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল (CICT), চেন্নাই · শিক্ষা মন্ত্রক, ভারত সরকার
ইন্টারফেসের এই অনুবাদটি একটি খসড়া; CICT এটি পর্যালোচনা করছে। English
ফিরে যান
অনুবাদ

22টি ভাষায় তিরুক্কুরাল

অষ্টম তফসিলের ভাষাগুলিতে CICT-র অনুবাদসহ সব 1,330টি কুরাল। একটি অধ্যায় ও একটি ভাষা বেছে নিন।

তিরুক্কুরাল পাঠসঙ্গীকে জিজ্ঞাসা করুন →

← পূর্ববর্তীপরবর্তী →
பொருட்பால் · Wealth › அங்கவியல் · Essentials of a State

88. பகைத்திறம் தெரிதல் · Knowing the Quality of Hate

তামিল পাঠটি কম্পিউটারের কণ্ঠে পড়া হয়।
871
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
பகையென்று சொல்லப்படும் தீமைபயப்பதை ஒருவன் விளையாட்டின்பொருட்டும் விரும்புதல் கூடாது.
872
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை.
ஒருவன் வில்லை ஏராகவுடைய உழவரோடு பகைகொண்டான் ஆயினும், சொல்லை ஏராகவுடைய உழவரோடு பகைகொள்ளல் கூடாது.
873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன்.
தான் தனியனாய்ப் பலரோடு பகைகொள்வான் பித்தரைக்காட்டிலும் அறிவற்றவன்.
874
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்தகைமைக்கண் தங்கிற்று உலகு.
பகையைத் தனக்கு நட்பாகக்கொண்டு நடக்கும் தன்மையை உடைய அரசனது பெருமையில் இவ்வுலகம் அடங்கும்.
875
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
தனக்கு உதவும் துணை ஏதுமில்லாமல், பகை இரண்டு இருக்குமானால், ஒருவன் அப்பகை இரண்டில் ஒன்றை இனிய துணையாகக்கொள்ளல் வேண்டும்.
876
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்தேறான் பகாஅன் விடல்.
பகைவனின் தன்மையை முன்னரே அறிந்திருந்தாலும் அறியாதிருந்தாலும் தனக்கு வேறொரு செயலால் தாழ்வுவருமானால் அப்பகைவனைச் சேராதும் நீக்காதும் இடையே விட்டுவைத்தல் வேண்டும்.
877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்கமென்மை பகைவர் அகத்து.
நொந்ததனை அறியாத நண்பர்க்கு அந்நோவு பற்றிச் சொல்லுதல் கூடாது; வலியின்மையை எதிர்பார்த்திருக்கும் பகைவரிடம் அவ்வலியின்மையைக் காட்டிக்கொள்ளும் வகையில் நடத்தல் கூடாது.
878
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்பகைவர்கண் பட்ட செருக்கு.
தான் செயலாற்றும் வகையை அறிந்து அது முடித்தற்கேற்பப் பொருளையும் படையையும் பெருக்கிக்கொண்டு, சோர்வு அணுகாமல் ஒருவன் தன்னைக் காத்துக்கொண்டானானால், அவனுடைய பகைவரின் செருக்கு அழியும்.
879
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து.
முள்மரத்தை அது இளையதாக இருக்கும்போதே களைதல் வேண்டும்; முதிர்ந்தபின் அதனை வெட்டமுனைந்தால் வெட்டுவார் கைக்கு அது இடையூறு செய்யும்.
880
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்செம்மல் சிதைக்கலா தார்.
தம் பகைவரது தருக்கினைக் கெடுக்காமல் இகழ்ச்சியால் விட்டுவைக்கும் அரசர், பின்னர்த் தம் உயிரையும் உறுதியாக இழக்க நேரிடும்.

অধ্যায়সমূহ

1.கடவுள் வாழ்த்து2.வான்சிறப்பு3.நீத்தார் பெருமை4.அறன் வலியுறுத்தல்5.இல்வாழ்க்கை6.வாழ்க்கைத் துணைநலம்7.மக்கட்பேறு8.அன்புடைமை9.விருந்தோம்பல்10.இனியவை கூறல்11.செய்ந்நன்றியறிதல்12.நடுவு நிலைமை13.அடக்கம் உடைமை14.ஒழுக்கம் உடைமை15.பிறனில் விழையாமை16.பொறையுடைமை17.அழுக்காறாமை18.வெஃகாமை19.புறங்கூறாமை20.பயனில சொல்லாமை21.தீவினையச்சம்22.ஒப்புரவறிதல்23.ஈகை24.புகழ்25.அருளுடைமை26.புலால் மறுத்தல்27.தவம்28.கூடா ஒழுக்கம்29.கள்ளாமை30.வாய்மை31.வெகுளாமை32.இன்னா செய்யாமை33.கொல்லாமை34.நிலையாமை35.துறவு36.மெய்யுணர்தல்37.அவா அறுத்தல்38.ஊழ்39.இறைமாட்சி40.கல்வி41.கல்லாமை42.கேள்வி43.அறிவுடைமை44.குற்றங்கடிதல்45.பெரியாரைத் துணைக்கோடல்46.சிற்றினம் சேராமை47.தெரிந்து செயல்வகை48.வலியறிதல்49.காலமறிதல்50.இடனறிதல்51.தெரிந்து தெளிதல்52.தெரிந்து வினையாடல்53.சுற்றந் தழால்54.பொச்சாவாமை55.செங்கோன்மை56.கொடுங்கோன்மை57.வெருவந்த செய்யாமை58.கண்ணோட்டம்59.ஒற்றாடல்60.ஊக்கம் உடைமை61.மடி இன்மை62.ஆள்வினை உடைமை63.இடுக்கண் அழியாமை64.அமைச்சு65.சொல்வன்மை66.வினைத் தூய்மை67.வினைத்திட்பம்68.வினை செயல்வகை69.தூது70.மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71.குறிப்பறிதல்72.அவை அறிதல்73.அவை அஞ்சாமை74.நாடு75.அரண்76.பொருள் செயல்வகை77.படை மாட்சி78.படைச் செருக்கு79.நட்பு80.நட்பாராய்தல்81.பழைமை82.தீ நட்பு83.கூடா நட்பு84.பேதைமை85.புல்லறிவாண்மை86.இகல்87.பகை மாட்சி88.பகைத்திறம் தெரிதல்89.உட்பகை90.பெரியாரைப் பிழையாமை91.பெண்வழிச் சேறல்92.வரைவின் மகளிர்93.கள்ளுண்ணாமை94.சூது95.மருந்து96.குடிமை97.மானம்98.பெருமை99.சான்றாண்மை100.பண்புடைமை101.நன்றியில் செல்வம்102.நாணுடைமை103.குடிசெயல் வகை104.உழவு105.நல்குரவு106.இரவு107.இரவச்சம்108.கயமை109.தகை அணங்குறுத்தல்110.குறிப்பறிதல்111.புணர்ச்சி மகிழ்தல்112.நலம் புனைந்து உரைத்தல்113.காதற் சிறப்புரைத்தல்114.நாணுத் துறவுரைத்தல்115.அலர் அறிவுறுத்தல்116.பிரிவு ஆற்றாமை117.படர்மெலிந் திரங்கல்118.கண் விதுப்பழிதல்119.பசப்புறு பருவரல்120.தனிப்படர் மிகுதி121.நினைந்தவர் புலம்பல்122.கனவுநிலை உரைத்தல்123.பொழுதுகண்டு இரங்கல்124.உறுப்புநலன் அழிதல்125.நெஞ்சொடு கிளத்தல்126.நிறையழிதல்127.அவர்வயின் விதும்பல்128.குறிப்பறிவுறுத்தல்129.புணர்ச்சி விதும்பல்130.நெஞ்சொடு புலத்தல்131.புலவி132.புலவி நுணுக்கம்133.ஊடலுவகை

অনুবাদ © সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল, চেন্নাই · CC BY 4.0 · তিরুক্কুরাল বহুভাষিক অ্যাপ হিসেবেও পাওয়া যায়

উদ্যোগে Government of India শিক্ষা মন্ত্রক, ভারত সরকার
রূপায়ণে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল (CICT), চেন্নাই