अनुवाद
22 भाषाओं में तिरुक्कुरल
आठवीं अनुसूची की भाषाओं में CICT के अनुवादों के साथ सभी 1,330 कुरल। अध्याय और भाषा चुनें।
பொருட்பால் · Wealth › அங்கவியல் · Essentials of a State
91. பெண்வழிச் சேறல் · Being led by Women
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.
வேண்டாப் பொருளும் அது.
இன்பம் காரணமாகத் தம் மனைவியை விரும்பி, அவள்வழியில் நடப்பவர் இனிய துணையாகிய அறத்தினை அடையமாட்டார்; அவ்வின்பமானது, பொருள்செய்ய முயல்வார்க்கு வேண்டாததும் ஆகும்.
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
நாணாக நாணுத் தரும்.
தன் ஆண்மையைவிட்டு மனைவியின் பெண்மையை விரும்புவானது செல்வம் ஆண்பாலார்க் கெல்லாம் நாணத்தைக் கொடுக்கும்.
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
நல்லாருள் நாணுத் தரும்.
ஒருவன் மனைவியிடம் தாழ்ந்து நடத்தற்குக் காரணமாகிய அச்சம் நல்லாருடன் பழகும்போது அவனுக்கு எக்காலத்தும் நாணத்தைக் கொடுக்கும்.
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.
வினையாண்மை வீறெய்த லின்று.
தன் மனையாளிடம் அஞ்சி நடக்கின்ற மறுமைப்பயன் இல்லாதவனுக்கு வினையை ஆளும் தன்மை இருப்பினும் அது நல்லோரால் போற்றப்படாததாகும்.
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
நல்லார்க்கு நல்ல செயல்.
தன் மனைவியிடம் அச்சம்கொள்வான் நல்லார்க்கு நல்லன செய்தலை எப்போதும் அஞ்சுவான்.
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.
அமையார்தோள் அஞ்சு பவர்.
தம் இல்லாளுடைய அழகிய தோளுக்கு அஞ்சுவார், விண்ணுலகத்து அமரர்போல் இவ்வுலகில் வாழ்வாராயினும் ஆண்மையற்றவராவர்.
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
பெண்ணே பெருமை உடைத்து.
நாணமில்லாமல் தன் மனைவி ஏவும் தொழிலைச் செய்து திரிவானது ஆண்மையைக்காட்டிலும் நாணமுடைய அவள் பெண்தன்மையே மேலானது.
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட் டாங்கு ஒழுகு பவர்.
பெட் டாங்கு ஒழுகு பவர்.
தாம் விரும்பியவாறில்லாமல் தம் மனைவி விரும்பியவாறு நடப்பவர் தம் நண்பர்களது குறையை முடிக்கமாட்டார்; அறச்செயல்களைச் செய்யவும் மாட்டார்.
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
அறச்செயல்களும் அவற்றிற்கு வேண்டிய பொருளைச் சேர்த்தலும் பிற இனிய செயல்களும் தம் மனையாள் ஏவும் செயல்களைச் செய்வார்க்கு இல்லை.
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
வினைசெய்தலை விழையும் நெஞ்சத்தையும் அதனாலாகிய செல்வத்தினையும் உடைய வேந்தர்க்கு மனைவியைச் சேர்தலால் ஏற்படும் அறிவீனம் எக்காலத்தும் உண்டாகாது.
अध्याय
1. கடவுள் வாழ்த்து2. வான்சிறப்பு3. நீத்தார் பெருமை4. அறன் வலியுறுத்தல்5. இல்வாழ்க்கை6. வாழ்க்கைத் துணைநலம்7. மக்கட்பேறு8. அன்புடைமை9. விருந்தோம்பல்10. இனியவை கூறல்11. செய்ந்நன்றியறிதல்12. நடுவு நிலைமை13. அடக்கம் உடைமை14. ஒழுக்கம் உடைமை15. பிறனில் விழையாமை16. பொறையுடைமை17. அழுக்காறாமை18. வெஃகாமை19. புறங்கூறாமை20. பயனில சொல்லாமை21. தீவினையச்சம்22. ஒப்புரவறிதல்23. ஈகை24. புகழ்25. அருளுடைமை26. புலால் மறுத்தல்27. தவம்28. கூடா ஒழுக்கம்29. கள்ளாமை30. வாய்மை31. வெகுளாமை32. இன்னா செய்யாமை33. கொல்லாமை34. நிலையாமை35. துறவு36. மெய்யுணர்தல்37. அவா அறுத்தல்38. ஊழ்39. இறைமாட்சி40. கல்வி41. கல்லாமை42. கேள்வி43. அறிவுடைமை44. குற்றங்கடிதல்45. பெரியாரைத் துணைக்கோடல்46. சிற்றினம் சேராமை47. தெரிந்து செயல்வகை48. வலியறிதல்49. காலமறிதல்50. இடனறிதல்51. தெரிந்து தெளிதல்52. தெரிந்து வினையாடல்53. சுற்றந் தழால்54. பொச்சாவாமை55. செங்கோன்மை56. கொடுங்கோன்மை57. வெருவந்த செய்யாமை58. கண்ணோட்டம்59. ஒற்றாடல்60. ஊக்கம் உடைமை61. மடி இன்மை62. ஆள்வினை உடைமை63. இடுக்கண் அழியாமை64. அமைச்சு65. சொல்வன்மை66. வினைத் தூய்மை67. வினைத்திட்பம்68. வினை செயல்வகை69. தூது70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்71. குறிப்பறிதல்72. அவை அறிதல்73. அவை அஞ்சாமை74. நாடு75. அரண்76. பொருள் செயல்வகை77. படை மாட்சி78. படைச் செருக்கு79. நட்பு80. நட்பாராய்தல்81. பழைமை82. தீ நட்பு83. கூடா நட்பு84. பேதைமை85. புல்லறிவாண்மை86. இகல்87. பகை மாட்சி88. பகைத்திறம் தெரிதல்89. உட்பகை90. பெரியாரைப் பிழையாமை91. பெண்வழிச் சேறல்92. வரைவின் மகளிர்93. கள்ளுண்ணாமை94. சூது95. மருந்து96. குடிமை97. மானம்98. பெருமை99. சான்றாண்மை100. பண்புடைமை101. நன்றியில் செல்வம்102. நாணுடைமை103. குடிசெயல் வகை104. உழவு105. நல்குரவு106. இரவு107. இரவச்சம்108. கயமை109. தகை அணங்குறுத்தல்110. குறிப்பறிதல்111. புணர்ச்சி மகிழ்தல்112. நலம் புனைந்து உரைத்தல்113. காதற் சிறப்புரைத்தல்114. நாணுத் துறவுரைத்தல்115. அலர் அறிவுறுத்தல்116. பிரிவு ஆற்றாமை117. படர்மெலிந் திரங்கல்118. கண் விதுப்பழிதல்119. பசப்புறு பருவரல்120. தனிப்படர் மிகுதி121. நினைந்தவர் புலம்பல்122. கனவுநிலை உரைத்தல்123. பொழுதுகண்டு இரங்கல்124. உறுப்புநலன் அழிதல்125. நெஞ்சொடு கிளத்தல்126. நிறையழிதல்127. அவர்வயின் விதும்பல்128. குறிப்பறிவுறுத்தல்129. புணர்ச்சி விதும்பல்130. நெஞ்சொடு புலத்தல்131. புலவி132. புலவி நுணுக்கம்133. ஊடலுவகை
अनुवाद © केंद्रीय शास्त्रीय तमिल संस्थान, चेन्नई · CC BY 4.0 · तिरुक्कुरल बहुभाषी ऐप के रूप में भी उपलब्ध



